For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூசிலாந்துடனான மகளிர் ஹாக்கி போட்டி - 3 -0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி

ஆக்லாந்து : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்துடன் மோதிய இன்றைய இறுதி போட்டியில் 3 கோல்களை அடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர்அணி நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய வீராங்கனைகள் நவ்நீத் கவுர் இரண்டு கோல்களையும் சர்மிளா தேவி ஒரு கோலையும் அடித்து போட்டியை வெற்றி பெற செய்துள்ளனர்.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி கண்ட இந்திய மகளிர் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில், பிரிட்டனுக்கு எதிரான நேற்றைய போட்டி மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

நியூசிலாந்தில் நடைபெற்று முடிந்துள்ள மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா நியூசிலாந்தை எதிர்த்து போட்டியிட்ட இன்றைய போட்டியில் அதிரடியாக 3 கோல்களை போட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் வீராங்கனைகள் நவ்நீத் கவுர் மற்றும் ஷர்மிளா தேவி தலா 2 மற்றும் 2 கோல்களை அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இறுதி போட்டியில் இந்தியா அபாரம்

இறுதி போட்டியில் இந்தியா அபாரம்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மோதினர். இதில் நியூசிலாந்து மற்றும் பிரிட்டனுக்கு இடையிலான போட்டிகளில் இந்தியா 2 வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் இந்தியா மீண்டும் மோதியது. இதில் முதல் 45 நிமிடங்களுக்கு கோல் எதுவும் அடிக்காத நிலையில் நவ்நீத் கவுர் தனது முதல் கோலை போட்டார். அவரை தொடர்ந்து ஷர்மிளா தேவியும் கோல் போட்டார்.

முதல் 3 போட்டிகள்

முதல் 3 போட்டிகள்

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் கடந்த 25ம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ராணி ராம்பால் தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியில் நியூசிலாந்து வளர்ச்சி அணியுடன் மோதிய இந்தியா 4க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து அடுத்தடுத்த போட்டிகளில் நியூசிலாந்துடன் 1க்கு 2 மற்றும் 0க்கு 1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி தோற்றது.

இந்திய மகளிர் அணி வெற்றி

இந்திய மகளிர் அணி வெற்றி

இதையடுத்து நேற்று பிரிட்டனுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேப்டன் ராணி ராம்பால் ஒரு கோல் அடித்து பிரிட்டனை வெற்றி கொள்ள உதவினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனைகள் நவ்நீத் மற்றும் ஷர்மிளா தேவியின் கோல்களால் இன்றும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

தலைமை பயிற்சியாளர் கருத்து

தலைமை பயிற்சியாளர் கருத்து

இதையடுத்து பேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜ்னே நியூசிலாந்திற்கு எதிரான இறுதி போட்டியில் இந்தியா 3 கோல்கள் அடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த சுற்றுப்பயணத்தின்மூலம் இந்தியா வளர்ச்சி பெறவேண்டிய இடங்கள் குறித்தும், போட்டியை மேலும் வேகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அறிந்து கொள்ள முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

Story first published: Wednesday, February 5, 2020, 20:11 [IST]
Other articles published on Feb 5, 2020
English summary
India concluded their five-match tour of New Zealand on a high, beating the hosts 3-0
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X