For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘உலகக்கோப்பையை இழிவுப்படுத்துவதா’ சர்ச்சையை கிளப்பிய கம்பீரின் ட்வீட்.. கொந்தளித்த ரசிகர்கள்

மும்பை: இந்திய ஹாக்கி அணி குறித்து கிரிக்கெட் வீரர் கம்பீர் போட்ட ட்வீட் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான வெண்கலப்போட்டியில் நேற்று இந்திய அணி வெற்றி பெற்றது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்து புதிய வரலாறு படைக்கப்பட்டது.

இந்த போட்டியில் ஜெர்மணி அணியை எதிர்கொண்ட இந்திய அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

'தோற்றாலும் நீங்கள் தங்கங்களே’ கதறி அழுத இந்திய வீராங்கனைகள்.. மனம் கலங்க வைக்கும் புகைப்படங்கள்!'தோற்றாலும் நீங்கள் தங்கங்களே’ கதறி அழுத இந்திய வீராங்கனைகள்.. மனம் கலங்க வைக்கும் புகைப்படங்கள்!

வெண்கலப்பதக்கம்

வெண்கலப்பதக்கம்

நேற்று இந்த ஆட்டத்தின் தொடக்கம் முழுவதும் ஜெர்மணி அணியின் ஆதிக்கமே நிறைந்து காணப்பட்டது. அடுத்தடுத்து கோல்களை போட்டதால் இந்திய அணியின் கதை முடிந்தது என கருதப்பட்டது. ஆனால் பதக்க வெறியில் சூப்பர் கம்பேக் கொடுத்த இந்திய வீரர்கள் ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் முறையே 27 மற்றும் 29-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினர். இதனால் 2-வது கால் பகுதி ஆட்டம் முடிவில் ஸ்கோர் 3-3 என சமநிலை பெற்றது.

வெண்கலப்பதக்கம்

வெண்கலப்பதக்கம்

3-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் அபாரமாக இருந்தது. 3-வது கால் பகுதி ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே, இந்திய வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல்களை போட்டனர். பதிலுக்கு ஜெர்மணி ஒரு கோல் போட இறுதியில் இந்திய அணி 5 - 4 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

குவிந்த வாழ்த்துகள்

குவிந்த வாழ்த்துகள்

இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனால் சமூக வலைதளத்தில் நேற்று முழுவதும் இந்திய ஹாக்கி அணி குறித்த பேச்சே நிறைந்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் போட்ட ட்வீட் ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது.

சர்ச்சை ட்வீட்

சர்ச்சை ட்வீட்

நேற்று ட்வீட் ஒன்றை போட்டிருந்தவர், 1983, 2007, 2011 உலகக்கோப்பை வெற்றிகளை மறந்துவிடுங்கள். ஒலிம்பிக்கில் ஹாக்கி அணி பெற்றுள்ள பதக்கம், உலகக்கோப்பையை விட பெரியது எனக்குறிப்பிட்டிருந்தார். கிரிக்கெட்டில் இந்திய அணி அந்த 3 வருடங்களிலும் உலகக்கோப்பையை வென்றிருந்தது. இதில் 2007, மற்றும் 2011 உலகக்கோப்பை தொடரில் கவுதம் கம்பீர் இடம்பெற்று சிறப்பாக விளையாடியிருந்தார்.

28 வருட கனவு

28 வருட கனவு

3 உலகக்கோப்பைகளையும் வெல்வதற்கு எத்தனை வீரர்களின் உழைப்பு உள்ளது, அவர்களின் கடின முயற்சிகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஹாக்கி போட்டியுடன் கிரிக்கெட்டை ஒப்பீடு செய்து, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை கம்பீர் இழிவுப்படுத்திவிட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

வெற்றியை இழிவுப்படுத்தினார்

வெற்றியை இழிவுப்படுத்தினார்

2 உலகக்கோப்பை தொடர்களில் ஹீரோவாக திகழ்ந்த கம்பீர், இப்படியா திடீரென வெற்றிகளை கொச்சைப்படுத்துவது, இந்திய கிரிக்கெட் அணியும் எளிதாக ஒன்றும் கோப்பைகளை வென்றுவிடவில்லை, எப்படி நீங்கள் அப்படி கூறலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர். 1983ம் ஆண்டுக்கு பிறகு 28 வருடங்கள் கழித்து தோனியின் தலைமையில் இந்தியா ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை ஏந்தியது. சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் கனவு அதுதான். அப்படி போராடி பெற்ற கோப்பையை ஒரே நொடியில் ஹாக்கியுடன் ஒப்பிட்டு இழிவுப்படுத்தி விட்டீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கண்டனம்

கண்டனம்

கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இறுதியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன் பின்னர் அரசியலில் களமிறங்கி தற்போது எம்.பி ஆகவும் திகழ்கிறார். கிரிக்கெட் வீரராகவும் சரி, அரசியல்வாதியாகவும் சரி, கம்பீர் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக்கோரியே ஆக வேண்டும் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Friday, August 6, 2021, 11:53 [IST]
Other articles published on Aug 6, 2021
English summary
Cricket fans gor Angry after, Gautam Gambhir calls Indian hockey team's bronze medal win bigger than any World Cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X