For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அபுதாபி தமிழ் சங்கம் நடத்திய கபடி போட்டி.. அதிகாரிகள் பாராட்டு

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி விளையாட்டு கழகத்தின் ஆதரவுடன் அபுதாபி தமிழ்ச்சங்கம் நடத்திய கபடி போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி விளையாட்டு கழகத்தின் ஆதரவுடன் அபுதாபி தமிழ்ச்சங்கம் கபடி போட்டி நடத்தியது. இதில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யு.ஏ.இ எக்சேஞ்ச் தலைவர் ஷெட்டியும், ஏர் இந்தியா அபுதாபி மேலாளர் நவீன் குமாரும் கலந்து கொண்டு வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

Abu dhabi Kabadi, Players got certificate

இதனடையே யு.ஏ.இ எக்சேஞ்ச் தலைவர் ஷெட்டி பேசியதாவது: தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றானனது கபடி போட்டி. இப்போட்டிகள் நடத்துவதில் பங்கேற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும், இதன் மூலமே நட்புறவு அதிகரிக்கும், இந்த போட்டிகள் நடத்தத் தேவையான ஒத்துழைப்பு தொடர்ந்து அளிக்கப்படும் என்று கூறினார்.

Abu dhabi Kabadi, Players got certificate

ஏர் இந்தியாவின் அபுதாபி மேலாளர் நவீன்குமார் கூறியதாவது: ஏர் இந்தியா விமான சேவை தாயகத்துக்கு செல்வதற்குரிய அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. கபடி போட்டி நடத்துவதற்கு ஏர் இந்தியா ஆதரவினை தெடர்ந்து அளிக்கும் என்றார்.

Abu dhabi Kabadi, Players got certificate

இந்த நிகழ்ச்சியில், தமிழ்ச்சங்கம் கடந்த 11 ஆண்டுகளாக நடத்தி வரும் இந்த சேவையில் இணைந்து நடுவராய் பங்கேற்று வரும் பாபுசாஜனுக்கு சிறப்பு சான்றிழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

Abu dhabi Kabadi, Players got certificate

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் ரெஜினால்ட். செயலாளர் ராஜு, பொருளாளர் சந்திரன், உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் அபுதாபி அய்மான் சங்க பொதுச்செயாளர் காயல் எஸ்.ஏ.சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Story first published: Thursday, September 1, 2016, 15:10 [IST]
Other articles published on Sep 1, 2016
English summary
Certificate has been given to players those who played in 'Kabadi" which undertaken by Abu dhabi Tamil Sangam.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X