For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ் தலைவாஸ் என்னப்பா ஆச்சு? தொடர்ந்து 3 தோல்விகள்.. பெங்களூரு, மும்பை வெற்றி

Recommended Video

தமிழ் தலைவாஸ் என்னப்பா ஆச்சு?- வீடியோ

சென்னை : புரோ கபடி லீக்கில் நேற்று தமிழ் தலைவாஸ் அணி தன் மூன்றாவது தொடர் தோல்வியை தழுவியது.

நேற்று நடந்த இரு கபடி லீக் போட்டிகளில், யு மும்பா அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியையும், பெங்களூரு புல்ஸ், தமிழ் தலைவாஸ் அணியையும் வீழ்த்தின.

தமிழ் தலைவாஸ் அணி தன் முதல் போட்டியில் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்த மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்து வருகிறது.

பெங்களூரு புல்ஸ் - தமிழ் தலைவாஸ் மோதல்

பெங்களூரு புல்ஸ் - தமிழ் தலைவாஸ் மோதல்

நேற்று இரவு ஒன்பது மணிக்கு நடைபெற்றது பெங்களூரு புல்ஸ் - தமிழ் தலைவாஸ் போட்டி. பெங்களூரு அணியின் பவன் செஹ்ராவத் அதிரடியாக செயல்பட்டு 20 ரெய்டு புள்ளிகளை அள்ளினார். தமிழ் தலைவாஸ் அணி துவக்கம் முதலே தடுமாறியது.

அஜய் தாக்குர் போராட்டம்

அஜய் தாக்குர் போராட்டம்

தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்குர் வழக்கம் போல சிறப்பாக செயல்பட்டார். அவர் தனி ஆளாக 20 ரெய்டு புள்ளிகளை பெற்றார். எனினும், தடுப்பாட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெரிதும் கோட்டை விட்டது.

பெங்களூரு புல்ஸ் அசத்தல்

பெங்களூரு புல்ஸ் அசத்தல்

பெங்களூரு புல்ஸ் அணியின் பவன் 20, காஷிலாங் அடாகே 9, ஆசிஷ் சங்வான் 7 புள்ளிகள் பெற்றனர். ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 37 புள்ளிகளை பெற்று 48-37 என 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

யு மும்பா வெற்றி பெற்றது

யு மும்பா வெற்றி பெற்றது

முன்னதாக நேற்று நடந்த முதல் போட்டியில் யு மும்பா அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 39-32 என வீழ்த்தியது. மிக சுவாரஸ்யமாக சென்ற இந்த போட்டியில் புள்ளிகளில் இரண்டு அணிகளும் பல முறை ஒருவரை ஒருவர் முந்திச் சென்றதால் பெரும் பரபரப்பாக நடைபெற்றது இந்த போட்டி.

Story first published: Friday, April 17, 2020, 21:07 [IST]
Other articles published on Apr 17, 2020
English summary
Pro Kabaddi League 2018 (PKL2018) - Bengaluru Bulls crushed Tamil Thalaivas, U Mumba beat Jaipur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X