For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PKL 2019 : ரெய்டில் கில்லி.. கெத்து காட்டிய இளம் வீரர்.. யுபி-ஐ வீழ்த்தி டபாங் டெல்லி அபார வெற்றி!

டெல்லி : நவீன் குமாரின் அபார ரெய்டுகளால் 9 புள்ளிகள் வித்தியாசத்தில் யுபி யுத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது டபாங் டெல்லி.

2019 புரோ கபடி லீக் ஆட்டத்தில் ஞாயிறு அன்று நடந்த போட்டியில் டபாங் டெல்லி - யுபி யுத்தா அணிகள் மோதின.

Pro Kabaddi League 2019 : Dabang Delhi vs UP Yoddha match result

சொந்த மண்ணில் ஆடும் டபாங் டெல்லி அணிக்கு 19 வயதே ஆன நவீன் குமார் தன் அசத்தல் ரெய்டுகளால் 16 புள்ளிகள் பெற்று வெற்றி தேடிக் கொடுத்தார்.

இந்தப் போட்டிக்கான யுபி யுத்தா அணியில் மோனு கோயாத் முன்னிலையில் நின்று ரெய்டு செய்தார். ரிஷான்க் தேவடிகாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

யுபி அணி ஆட்டத்தின் துவக்கத்தில் ரெய்டுகளில் அசத்தி 4 - 0 என முன்னிலை பெற்றது. ஆனால், டெல்லி அணியின் நவீன் குமார் தன் ரெய்டுகளால் கெத்து காட்ட, அந்த அணி வேகமாக முன்னேறியது.

முதல் பாதி முடிய இரண்டு நிமிடங்கள் இருக்கும் போது யுபி யுத்தா அணியை ஆல்-அவுட் செய்தது டபாங் டெல்லி அணி. முதல் பாதியின் முடிவில் 15 - 11 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது அந்த அணி.

யுபி யுத்தா அணியின் மூத்த வீரர் மோனு கோயாத்தும் ரெய்டுகளில் அசத்தினார். இந்தப் பக்கம் இளம் வீரர் நவீன் குமாரும் விடவில்லை. இத்துடன் டெல்லி அணியின் தடுப்பாட்டமும் இரண்டாம் பாதியில் உத்வேகம் பெற்றது.

ஆட்ட நேரம் முடிய ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது டெல்லி அணி மற்றொரு ஆல்-அவுட் செய்தது. இறுதியில் டபாங் டெல்லி அணி 36 - 27 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றது.

Story first published: Monday, August 26, 2019, 15:06 [IST]
Other articles published on Aug 26, 2019
English summary
Pro Kabaddi League 2019 : Dabang Delhi vs UP Yoddha match result
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X