For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புரோ கபடி லீக்.... யார் யார் எந்த அணியில் உள்ளனர்... இதோ முழு பட்டியல்!

புரோ கபடி லீக் சீசன் 6க்கான வீரர்கள் ஏலம் முடிவடைந்தது. இதில், யார் யார் எந்த அணிக்காக விளையாட உள்ளனர் என்பதற்கான முழு பட்டியல் வெளியாகி உள்ளது.

மும்பை: புரோ கபடி லீக் ஆறாவது சீசனுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் முடிவுக்கு வந்ததது. இதில் 5 இந்தியர்கள் உள்பட 6 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டனர். மொத்தம் 194 பேர் 12 அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

புரோ கபடி லீக் ஆறாவது சீசன் அக்டோபர் 19ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் சீசன் 6-க்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடந்தது.

Pro kabaddi league teams finalised

இதற்காக 58 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 422 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். ஐந்து இந்தியர்கள் உள்பட 6 வீரர்கள், தலா ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டனர்.

மொத்தம் 194 பேர் 12 அணிகளுக்காக விளையாட உள்ளனர். ஒவ்வொரு அணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் முழு பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

பெங்கால் வாரியர்ஸ்

சுர்ஜிங் சிங், மனிந்தர் சிங், ரவீந்திர ரமேஷ் குமாவத், அமரேஷ் மோன்டல் தக்க வைக்கப்பட்டுள்ளனர். ரான் சிங், ஜாங் குன் லீ, ஜியாயுர் ரஹ்மான், ஸ்ரீகாந்த் தேவ்தியா, மகேஷ் கவுட், விஜின் தங்கதுரை, புபேந்தர் சிங், விட்டல் மேடி, அமித் குமார், ராகேஷ் நர்வால், அமித் நாகர், ஆஷிஷ் சோகர், மனோஜ் துல், மிதுன் குமார் என மொத்தம் 18 பேர் உள்ளனர்.

Pro kabaddi league teams finalised

பெங்களூரு புல்ஸ்

ரோஹித் குமார் தக்க வைக்கப்பட்டார். பவன் குமார், மகேந்தர் சிங், காஷிலிங் அடகே, ஜஸ்மீர் சிங் குலியா, ராஜூ லால் சவுத்ரி, டாங்க் ஜூ ஹாங்க், குயுங்க் டே கிம், சந்தீப், ஜவஹர் விவேக், மகேஷ் மாருதி மக்டம், மகேந்திர சிங் டாகா, பி.ஆர். நிதேஷ், அனில், வி. ஆனந்த், ரோஹித், ஹரிஷ் நாயக், அமித் ஷோரன், சுமித் சிங் என மொத்தம் 19 பேர் உள்ளனர்.

தபாங்க் டெல்லி

மீரஜ் ஷேக், துஷார் பல்ராம் போயர், தபஸ் பால், விஷால் ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர். சந்திரன் ரஞ்சித், விஷால் மானே, விஜாய் லான்ட்கே, பவன் குமார், ரவிந்தர் பாஹல், ராஜேஷ் நர்வால், ஷபீர் பாபு, சித்தார்த், கோம்சன் தோங்கம், அனில் குமார், கமல் கிஷோர் ஜாட், யோகேஷ் ஹூடா, ஜொகிந்தர் நர்வால், சத்பால் நர்வால், நவீன் குமார் என, 19 பேர் அணியில் உள்ளனர்.

குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ்

சச்சின், சுனில் குமார், மகேந்திர ராஜ்புத் தக்க வைக்கப்பட்டனர். கே. பிரபஞ்சன், பர்வேஷ் பைன்ல்ஸ்வால், ருதுராஜ் கோரவி, அஜய் குமார், டாங்க் ஜியான் லீ, ஹோதி ஓஷ்டராக், ஷுபம் பல்கர், அமித் சர்மா, தர்மேந்தர், லலித் சவுத்ரி, விக்ரம் கன்டோலா, அனில் என மொத்தம் 15 வீரர்கள் உள்ளனர்.

ஹரியானா ஸ்டீலர்ஸ்

மோனு கோயத், சுரேந்தர் நாடா, விகாஸ் கன்டோலா, வாஜிர் சிங், முகமது ஜாகிர் ஹூசைன், பிரதீக், பேட்ரிக் ஜூவா முவாய்.
தக்க வைக்கப்பட்டோர் - குல்தீப் சிங், மயூர் ஷிவ்தார்கர், நீரஜ் குமார், விகாஸ், அருண் குமார் என, 12 பேருடன் களமிறங்க உள்ளது.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

தீபக் நிவாஸ் ஹூடா, சந்தீப் துல், மோஹித் சில்லார், அனூப் குமார், கே. செல்வமணி, பாஜிராவ் ஹோடாகே, சாங்க் கோ, டேவிட் மோசம்பயி, கங்காதரி மல்லேஸ், சுனில் சித்காவாலி, ஆனந்த் படேல், சிவ ராமகிருஷ்ணா, பிரிஜேந்திர சிங் சவுத்தரி, லோகேஷ் கவுசிக் என 14 பேர் உள்ளனர்.

பட்னா பைரேட்ஸ்

பிரதீப் நர்வால், ஜெய்தீப், ஜவஹர் தாகர், மனிஷ் குமார் தக்க வைக்கப்பட்டனர். தீபக் நர்வால், விகாஸ் காலே, குல்தீப் சிங், மஞ்சித், துஷார் படேல், சுரேந்தர் சிங், டேடியோக் இயோம், ஹியூனில் பார்க், ஜே மின் லீ, விகாஸ் ஜாக்லன், விஜய் குமார், ரவிந்தர் குமார், பிரவீன் பிர்வால், அரவிந்த் குமார், விஜய் என 19 வீரர்களுடன் உள்ளது.

புனேரி பல்தான்

சந்தீப் நர்வால், ராஜேஷ் மோன்டல், ஜி.பி. மோரே, கிரிஷ் மாருதி எர்னாக், விகாஷ் காத்ரி, ரிங்கு நர்வால், மோனு ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர். நிதின் தோமர், வினோத் குமார், சஞ்சய் ஷ்ரேஷ்டா, பர்வேஷ், அக் ஷய் ஜாதவ், பஜ்ரங், டகாமிட்சு கோனோ, அமித் குமார் என, அணியில் 15 வீரர்கள் உள்ளனர்.

தமிழ் தலைவாஸ்

அஜய் தாக்குர், அமித் ஹூடா, சி. அருண், டி. பிரதீப் தக்க வைக்கப்பட்டனர். சுகேஷ் ஹெக்டே, ஜே. தர்ஷன், மஞ்சில் சில்லார், ஜஸ்விர் சிங், கே. ஜெயசீபன், எம்.எஸ். அதுல், சான் சிக் பார்க், அனில் சர்மா, அபிநந்தன் சாந்தல், டி. கோபு, விமல் ராஜ், ஜே மின் லீ, ரஜ்னீஷ் என, 17 பேர் அணியில் உள்ளனர்.

தெலுகு டைட்டன்ஸ்

நிலேஷ் சலுங்கே, மோசன் மக்சூத்லோஜபாரி, விஷால் பரத்வாத், ரக் ஷித், சோம்பிர் தக்க வைக்கப்பட்டனர். ராகுல் சவுத்ரி, அபோசர் மொகாஜெர்மிகானி, பர்ஹாத் ரஹிமி மிலகார்டன், ராகேஷ் சிங் குமார், மனோஜ் குமார், சங்கேத் சாவன், மகேந்தர் ரெட்டி, கமால் சிங், அங்கித் பெனிவால், ஆனந்த் என, 14 பேர் அணியில் உள்ளனர்.

யுபி யோத்தா

இ. சுபாஷ், சுரேந்தர் சிங், சிவ்ஓம் தக்க வைக்கப்பட்டனர். பசேல் அட்ராசலி, தர்மராஜன் சேரலாதன், அபிஷக் சிங், சித்தார்த் தேசாய், வினோத் குமார், அபோபசல் மக்சூத்லோமகாலி, ஆர். ஸ்ரீராம், ரோஹித் பலியான், ஹாதி தாஜிக், ஆதிநாத் காவாலி, கவுரவ் குமார், மோஹித் பல்யான், அனில் என, 16 பேர் உள்ளனர்.

யு மும்பா

பங்கஜ், நிதேஷ் குமார் தக்க வைக்கப்பட்டனர். ரிஷாங்க் தவாடிகா, பிரஷாந்த் குமார் ராய், ஜீவ குமார், ஸ்ரீகாந்த் ஜாதவ், சச்சின் குமார், தர்ஷன் காதியான், சியாங்க் ரியோல் கிம், சுலைமான் கபிர், நரேந்தர், ரோஹித் குமார் சவுத்ரி, அமித், பானு பிரதாப் தோமர், ஆசாத் சிங், அர்கம் ஷேக் என, 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Story first published: Friday, June 1, 2018, 17:58 [IST]
Other articles published on Jun 1, 2018
English summary
The full player list of all the pro kabaddi league teams announced.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X