For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

12 வயது சிறுவனின் இனவெறி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்.. ஷாக் சம்பவம்!

பிர்மிங்காம் : இங்கிலாந்தில் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

அந்த தொடரில் இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீரர்கள் "பிளாக் லைவ்ஸ் மேட்டர்" என்ற வாசகத்தை தங்கள் உடையில் பதித்து ஆடி வருகின்றனர்.

ஆனாலும், சமூகத்தில் எல்லோரும் சமம் என்ற எண்ணம் ஏற்படவில்லை என்பதை சுட்டிக் காட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நாய்க்கு தாங்க முக்கியத்துவம்... மனைவி குறித்த கேள்விக்கு பதிலளித்த புவனேஸ்வர் குமார்நாய்க்கு தாங்க முக்கியத்துவம்... மனைவி குறித்த கேள்விக்கு பதிலளித்த புவனேஸ்வர் குமார்

சாஹா அதிர்ச்சி

சாஹா அதிர்ச்சி

கிறிஸ்டல் பேலஸ் அணி வீரர் வில்பிரையிட் சாஹாவுக்கு 12 வயது சிறுவன் ஒருவன் ட்விட்டரில் இனவெறியுடன் சில பதிவுகளை அனுப்பி இருக்கிறான். அதைக் கண்ட சாஹா அதிர்ச்சி அடைந்து அதை ட்விட்டரில் வெளியிட்டார்.

மிரட்டல்

மிரட்டல்

அந்த சிறுவன் ஆஸ்டன் வில்லா அணியின் ரசிகர் என தெரிய வந்துள்ளது. ஆஸ்டன் வில்லா அணிக்கு எதிரான போட்டியில் சாஹா கோல் அடிக்கக் கூடாது எனக் கூறி மிரட்டி பதிவுகள் அனுப்பப்பட்டு இருந்தது. சாஹாவை கருப்பர் எனக் குறிப்பிட்டு திட்டியும் இருந்தார்.

பேயாக வருவேன்

பேயாக வருவேன்

மேலும், அவர் கோல் அடித்தால் தான் அவர் வீட்டிற்கு பேயாக வருவேன் எனவும் கூறி இருக்கிறான் அந்த சிறுவன். சில கருப்பினத்தவரை புண்படுத்தும் வகையிலான சில புகைப்படங்களையும் அந்த சிறுவன் அனுப்பி இருக்கிறார்.

கைது

கைது

சாஹா இந்த பதிவுகள், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதை அடுத்து, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை தாமாகவே முன் வந்து யார் இந்த பதிவுகளை அனுப்பியது என விசாரித்து அந்த 12 வயது சிறுவனை கைது செய்துள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

இனவெறிக்கு எதிராக காவல்துறை 12 வயது சிறுவனை கைது செய்த நிலையில், அதை வரவேற்று இருக்கிறார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர். அவர் இந்த அதிரடி கைது, இணையத்தில் வீரத்தை காட்டும் பலரையும் தடுத்து நிறுத்தும் என கூறி உள்ளார்.

ஆர்ச்சர் கேள்வி

ஆர்ச்சர் கேள்வி

கடந்த சில மாதங்கள் முன்பு ஜோப்ரா ஆர்ச்சரும் இதே போன்ற இனவெறி பதிவுகளை தன் சமூக வலைதள கணக்குகளில் கண்டு வருத்தம் அடைந்து இருந்தார். சக மனிதர்களை எப்படி இவ்வாறு இவர்களால் பேச முடிகிறது என அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

Story first published: Monday, July 13, 2020, 11:35 [IST]
Other articles published on Jul 13, 2020
English summary
12 year old arrested for sending racist messages to Wilfried Zaha. Jofra Archer welcomes this move.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X