செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

சென்னை: 2022ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி வெற்றி பெற்றதா தோல்வி பெற்றதா என்பதை தற்போது காணலாம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழக அரசு 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு போட்டியை நடத்தியது.

ஆனால், இது போட்ட பணத்தை எடுக்க முடிந்ததா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இதனை தோல்வி என்று குறிப்பிட முடியாது.

2 அதிரடி முடிவுகள்.. 4வது டி20 போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11.. வெளியேறும் வீரர்கள் யார்? யார்?2 அதிரடி முடிவுகள்.. 4வது டி20 போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11.. வெளியேறும் வீரர்கள் யார்? யார்?

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

பொதுவாக கிரிக்கெட், கால்பந்து போன்ற போட்டிகளை தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, டிக்கெட் விற்பனை, விளம்பரம் மூலம் அதிக லாபத்தை எடுக்க முடியும். ஆனால் செஸ் போட்டி அப்படி அல்ல. இதற்கு கிரிக்கெட்டை போன்ற பார்வையாளர்களும் இல்லை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் செய்தாலும் பார்க்க ஆள் இல்லை. எனினும் தமிழக அரசு செய்த விளம்பரம் மூலம், முதல் 6 நாளில் 46 லட்சம் ரூபாய் டிக்கெட் மூலம் வருவாய் கிடைத்தது.

பறைசாற்றிய தமிழக அரசு

பறைசாற்றிய தமிழக அரசு

இதனை தமிழக அரசு தான் ஸ்பான்சர் செய்தது. அதாவது, பெப்சி நிறுவனம் கிரிக்கெட் போட்டி நடத்த பணம் வழங்கும், அல்லவா அப்படி தான் இதுவும். இதனை தமிழக அரசு செய்த முதலீடு தான் என்று பார்க்க வேண்டும். தொடக்க விழா மற்றும் நிறைவு விழா மூலம் தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வரலாற்றையும், கலையையும் உலகறிய செய்துவிட்டது தமிழக அரசு.

சுற்றுலா துறை

சுற்றுலா துறை

இது செஸ் ஒலிம்பியாட்டை பார்த்த அனைத்து நாட்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிந்து இருக்கும். மேலும் இதன் மூலம் தமிழகத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைய நிறைய வாய்ப்புள்ளது. காரணம், தற்போது பல வௌளிநாட்டிலிருந்து மக்கள், தமிழகம் வர செஸ் ஒலிம்பியாட் வாய்ப்பை கொடுத்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு செலவு செய்ததை விட, கிடைக்கப் போகும் வருமானம் மிகவும் அதிகம்.

மாணவர்களுக்கு ஊக்கம்

மாணவர்களுக்கு ஊக்கம்

மேலும், இந்தியாவின் செஸ் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது. தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியதன் மூலம் , மேலும் பல்வேறு இளம் சிறுவர்களுக்கு இது பெரிய ஊக்கத்தை கொடுக்கும். இதற்கு உத்தனை கோடி ரூபாய் முதலீடு செய்தாலும் தகும். மேலும், அரசியல் ரீதியாகும் சில கருத்துக்களை செஸ் ஒலிம்பியாட் மூலம் பறைசாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் ஒரே கல்லில 3 மாங்காய் அடித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
2022 chess Olympiad in Chennai success or not – Full analysis செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்
Story first published: Wednesday, August 10, 2022, 11:47 [IST]
Other articles published on Aug 10, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X