செஸ் ஒலிம்பியாட்டில் கலக்கிய தமிழக வீரர்கள்.. உலக சாம்பியனாக மாற வாய்ப்பு.. முழு விவரம்

சென்னை: 2022ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் மூலம் தமிழக ரசிகர்களுக்கு மேலும் சில வீரர், வீராங்கனைகள் பரீட்சையம் ஆகி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு விளையாட்டிலும் அதில் உச்சம் தொட்டவர்களை நமக்கு தெரிந்திருக்கும். கிரிக்கெட் என்றால் சச்சின், கால்பந்து என்றால் மெஸ்ஸி, ரானால்டோ, டென்னிஸ் என்றால் ரோஜர் பெடரர்

அதே போல் செஸ் என்றால், அது பற்றி தெரியவில்லை என்றால் கூட விஸ்வநாதன் ஆனந்த் என்ற பெயர் நமக்கு தெரிந்து இருக்கும்.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

குகேஷ்

குகேஷ்

தற்போது இந்த பட்டியலில் மேலும் சில வீரர்கள் இணைந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அந்த வீரர்கள் அனைவரும் தமிழர்கள். அப்படி என்றால் நாம் அவர்களை பற்றி தெரிந்திருக்க வேண்டும் அல்லவா. இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்தவர் குகேஷ். தொடர்ந்து 8 போட்டியில் வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா என தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற குகேஷ், அவருடைய புள்ளிகளையும் அதிகப்படுத்தியுள்ளார்.

பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

இதனைத் தொடர்ந்த நம் அனைவருக்கும் ஏற்கனவே பரிட்சையம் ஆன பிரக்ஞானந்தா, இந்த தொடரிலும் தமது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தனி நபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இருக்கிற பிரக்ஞானந்தா, விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு தோல்வி மற்றும் 3 டிராவை சந்தித்துள்ளார்.

அதிபன் பாஸ்கரன்

அதிபன் பாஸ்கரன்

இதே போன்று மயிலாடுதுறையை சேர்ந்த அதிபன் பாஸ்கரன், விமர்சகர்களால் பீஸ்ட் என்ற பெயரை பெற்றுள்ளார். அதற்கு காரணம், அவர் கடைப்பிடிக்கும் ஆக்கோரஷமான காய் நகர்த்தல் தான். அதிபன் 6 போட்டியில் விளையாடி இருக்கிறார். இதில் 3 வெற்றி, 1 தோல்வி, 2 டிராவை அதிபன் பாஸ்கரன் சந்தித்துள்ளார்.

நந்திதா

நந்திதா

செஸ் ஒலிம்பியாட் தொடரில் கடைசியாக இந்திய மகளிர் சி அணியில் சேர்க்கப்பட்டவர் நந்திதா. இவர் 10 சுற்றில் களமிறங்கி 7 சுற்றில் வெற்றி, 2 சுற்றில் தோல்வி,ஒரு போட்டியில் டிரா ஆகியவை கண்டுள்ளார். நந்திதாவின் செயல்பாடும் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
2022 chess Olympiad medal winners and stars you need to know செஸ் ஒலிம்பியாட்டில் கலக்கிய தமிழக வீரர்கள்.. உலக சாம்பியனாக மாற வாய்ப்பு.. முழு விவரம்
Story first published: Wednesday, August 10, 2022, 12:39 [IST]
Other articles published on Aug 10, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X