For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல்த்தில் வரலாறு படைத்த இந்தியா.. பாக். வீரரை வீழ்த்தி தங்கம்.. மல்யுத்தத்தில் பதக்க வேட்டை

பிர்மிங்காம்: 2022வது காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் மல்யுத்தத்தில் பதக்க வேட்டையில் ஈடுபட்டனர்.

Recommended Video

Commonwealth Cricket இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
2022 commonwealth games day 9 – India won 13 Gold medal – wrestlers shines again

நேற்று மட்டும் மல்யுத்தத்தில் இந்தியா 3 தங்கம் வென்ற நிலையில், 9வது நாளிலும் 3 தங்கத்தை வென்று அசத்தியது.

ஒரு காலத்தில் மல்யுத்தம் என்றாலே அது இந்தியாவும், பாகிஸ்தானும் தான். இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து சர்வதேச தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் இறதிப் போட்டியில் மோதியது.

ஆடவருக்கான 74 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் நவீன், பாகிஸ்தான் வீரர் முகமது தாஹிரை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆக்கோரஷமாக விளையாடி புள்ளிகளை குவித்த நவீன், 9க்கு0 என்ற புள்ளிகள் கணக்கில் தங்கம் வென்றார். இதே போன்று மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் வினேஸ் போகட் தங்கம் வென்று அசத்தினார்.

ரோகித், ரிஷப் பண்ட் வெறித்தனம்..192 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா..சஞ்சு சாம்சன் மெர்சல்ரோகித், ரிஷப் பண்ட் வெறித்தனம்..192 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா..சஞ்சு சாம்சன் மெர்சல்

இது காமன்வெல்த் போட்டியில் வினேஷ் போகட் வெல்லும் ஹாட்ரிக் தங்கமாகும். இதே போன்று ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற ரவிகுமார் தஹியா, இறுதிப் போட்டியில் நைஜிரிய வீரரை எதிர்கொண்டார். 10க்கு0 என்ற கணக்கில் வென்ற அவர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதே போன்று 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா கேலாட் ஸ்காட்லாந்து வீராங்கனையை வீழ்த்தி வெண்கலம் வென்றார். மகளிர் குத்துச்சண்டை 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மினுக்கு வெண்கலம் கிடைத்தது. லான் பவுல்ஸ் ஆடவர் பிரிவில் 4 பேர் கொண்ட இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தது. டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத், ஸ்ரீஜா ஜோடி இறுதிப் போட்டிக்கு சென்று பதக்கத்தை உறுதி செய்தது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி 12வது தங்கமாகும்.

Story first published: Tuesday, August 9, 2022, 19:00 [IST]
Other articles published on Aug 9, 2022
English summary
2022 commonwealth games day 9 – India won 13 Gold medal – wrestlers shines again வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி.. மல்யுத்தத்தில் பாக். வீரரை வீழ்த்தி நவீன் தங்கம்.. 13 வது தங்கத்தை வென்ற இந்தியா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X