For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச போல் வால்ட்டில் கால் பதித்த 3 தமிழர்கள்.. முதல் போட்டியிலேயே 3வது இடம் பிடித்த பரணிகா

புசான்: தென் கொரியாவில் நடைபெற்ற சர்வதேச போல் வால்ட் போட்டியில் மூன்று தமிழக வீரர்கள் கால் பாதித்து அசத்தினர்.

Recommended Video

IND vs ZIM Innocent Kaia-வை Mankad செய்த Deepak Chahar கடைசியில் Twist *Cricket

ஒவ்வொரு துறையிலும் அசத்தி வரும் தமிழகம், தற்போது விளையாட்டு துறையிலும் கால் பதித்து வருகிறது.

தடகளப் போட்டியில் இந்தியா எப்போதும் பின்தங்கி இருக்கும். ஹரியானாவிலிருந்து மட்டுமே தடகள வீரர்கள் வருவார்கள் என்ற கதை தற்போது மாறி வருகிறது.

போல் வால்ட் எனப்படும் குச்சியை ஊண்டி தாண்டும் போட்டியில் தற்போது தமிழகம் முன்னணியில் உள்ளது. சர்வதேச அளவில் நடைபெற்ற புசான் போல் வால்ட் போட்டியில் தமிழகம் சார்பாக 3 வீரர்கள் பங்கேற்றனர். இதில், 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் தமிழக வீரர் சக்தி மகேந்திரன் 4.60 மீட்டர் உயரம் தாண்டி 4வத இடத்தை பிடித்தார்.

3 Tamilnadu athletes shines in Busan International Pole vault meet

இந்தப் போட்டியில் ஜப்பான் வீரர் கிட்டாடா 5 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தை பிடித்தார். இதே போன்று ஆடவருக்கான சீனியர் பிரிவில் தேசிய அளவில் சாதனை படைத்த தமிழக வீரர் சுப்பிரமணிய சிவா, 2வது முயற்சியில் 5 மீட்டர் தாண்டினார். ஆனால் அவரால் முதல் 3 இடங்களை பிடிக்க முடியவில்லை.

சீனியர்களுக்கான மகளிர் பிரவில் தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் 3 புள்ளி 90 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த மூன்று வீரர்களுக்கும் இதுவே முதல் சர்வதேச தொடராகும். வெற்றி பெற்ற பரணிகாவுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை வாங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கால கொடுமை.. ! திறமை இருந்தால் மட்டும் போதுமா? பொன்னான வாய்ப்புகளை வீணடிக்கும் தமிழக வீரர்கால கொடுமை.. ! திறமை இருந்தால் மட்டும் போதுமா? பொன்னான வாய்ப்புகளை வீணடிக்கும் தமிழக வீரர்

Story first published: Tuesday, August 23, 2022, 16:51 [IST]
Other articles published on Aug 23, 2022
English summary
3 Tamilnadu athletes shines in Busan International Pole vault meet சர்வதேச போல் வால்ட்டில் கால் பதித்த 3 தமிழர்கள்.. முதல் போட்டியிலேயே 3வது இடம் பிடித்த பரணிகா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X