"மனநல பிரச்சனை?".. ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறும்.. 4 முறை சாம்பியன் சிமோன் - பேரிழப்பு!

டோக்கியோ: நான்கு முறை ஒலிம்பிக் சாம்பியனுக்கு இப்படியொரு சோதனையா? என்று ரசிகர்கள் கலங்கிப் போயுள்ளனர்.

ஆம்! சில மருத்துவ காரணங்களுக்காக அமெரிக்காவின் artistic gymnastics வீராங்கனை சிமோன் பைல்ஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.

அரியேக் ஜிம்னாஸ்டிக்ஸ் மையத்தில் சிமோன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவரால் சரிவர துல்லியமாக தனது மூவ்மெண்ட் கொடுக்க முடியவில்லை, தடுமாறினார். போட்டியின் போதும் இந்த தவறு எதிரொலித்தது. அவர் வெறும் 13.733 எனும் ஸ்கோர் மட்டுமே பெற்றார்.

ஏமாற்றம் அளித்த.. ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நயோமி.. ஒலிம்பிக் தீபத்தை ஏற்றியவருக்கே தோல்வி! ஏமாற்றம் அளித்த.. ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நயோமி.. ஒலிம்பிக் தீபத்தை ஏற்றியவருக்கே தோல்வி!

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

பிறகு, பைல்ஸ் தனது பயிற்சியாளர் சிசிலி லாண்டி மற்றும் யுஎஸ்ஏ ஜிம்னாஸ்டிக்ஸ் தடகள பயிற்சியாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இறுதியில் அவர் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஜோர்டான் சிலிஸ், கிரேஸ் மெக்கல்லம் மற்றும் சுனிசா லீ ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டது, பைல்ஸ் பங்கேற்க வாய்ப்பில்லை என்பதைக் குறித்தது.

 மருத்துவ அனுமதி

மருத்துவ அனுமதி

சில நிமிடங்கள் கழித்து யுஎஸ்ஏ ஜிம்னாஸ்டிக்ஸ் பைல்ஸ் தொடரில் இருந்து வெளியேறுவதை உறுதிசெய்தது. பிறகு, அதிகாரப்பூர்வமாக நிகழ்வு தொடக்க பட்டியல்கள் புதுப்பிக்கப்பட்டன. பிறகு "சிமோன் ஒரு மருத்துவ பிரச்சினை காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். எதிர்வரும் காலக்கட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான மருத்துவ அனுமதியை பெற, அவர் தினமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்" என்று அறிவிக்கப்பட்டது.

 மனப்பிரச்சனையா?

மனப்பிரச்சனையா?

அமெரிக்க பயிற்சியாளரின் கருத்துக்களின்படி, "பைல்ஸ் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறுவது உடல் காயத்தினால் அல்ல. அவரது மனநல பிரச்சினையே காரணம்" என்று கூறியதாக என்.பி.சி செய்தி வெளியிட்டது. டோக்கியோவில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அமெரிக்க அணி தகுதிப் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததே பைல்ஸ் தான்.

 பெரும் இழப்பு

பெரும் இழப்பு

அவர் மீது வைக்கப்படும் அளவுக்கதிகமான பிரஷரே அவரது பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் முணுமுணுக்கப்படுகிறது. பைல்ஸ் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறி இருப்பது அமெரிக்க அணியின் மிகப்பெரிய இழப்பாகவும் பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
4 time Olympic champion Simone Biles out - ஒலிம்பிக்
Story first published: Tuesday, July 27, 2021, 19:36 [IST]
Other articles published on Jul 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X