For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதாகப்பட்டது.. பெண்கள் விளையாட்டுக்களை அதிகம் ரசிப்பது.. வேற யாரு.. அவிங்கதான்!

லண்டன்: மகளிர் விளையாட்டைப் பார்க்க வரும் ரசிகர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆண்கள்தான் என்று நீல்சன் ஸ்போர்ட்ஸ் என்ற ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.

எல்லா வகையான பெண்கள் விளையாட்டிலும், பெண்களை விட ஆண்களே அதிகம் வந்து பார்ப்பதாகவம் நீல்சன் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் விளையாட்டு குறித்த ஆர்வமும் கூட பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் இருக்கிறதாம்.

உலகம் முழுவதும் 8 முக்கிய நாடுகளில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த ரிசல்ட் என்னவென்றால் ஆண்களே பெண்கள் விளையாட்டை அதிகம் பார்க்கிறார்கள் என்பது. ஆய்வுக்குட்பட்ட நாடுகளில் முக்கியமானவை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து.

பெண்கள் விளையாட்டுக்கு மவுசு

பெண்கள் விளையாட்டுக்கு மவுசு

இதுகுறித்து நீல்சன் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் ஆய்வுக் குழு தலைவரான லின்சி டக்ளஸ் கூறுகையில், முன்பு போல இப்போது இல்லை. பெண்கள் விளையாட்டு பிரபலமாகி வருகிறது. ஆண்கள் விளையாட்டுக்கு நிகராக அதுவும் புகழ் பெற்று வருகிறது. இது விளையாட்டு உலகில் பெண்களின் புரட்சி என்றே கூறலாம்.

நாடுகள் அதிகரிப்பு

நாடுகள் அதிகரிப்பு

முன்பு குறிப்பிட்ட சில நாடுகளில்தான் பெருமளவில் பெண்கள் விளையாட்டு அதிகம் இடம் பெற்றது. ஆனால் இன்று இது வெகுவாக விஸ்தரித்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் பெண்கள் விளையாட்டு பிரபலமாகி விட்டது. சில குறிப்பிட்ட நாடுகளில்தான் பெண்கள் விளையாட்டு எழுச்சி பெறாமல் உள்ளது.

டென்னிஸ் கிரிக்கெட் கால்பந்து

டென்னிஸ் கிரிக்கெட் கால்பந்து

டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து, கோல்ப் ஆகியவற்றில் இன்று பெண்கள் வெகுவாக அதிகரித்து விட்டனர். அமெரிக்காவில் கால்பந்தில் பெண்கள் பிரமாண்டம் காட்டி வருகின்றனர். 2017ல் ஐரோப்பிய மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டித் தொடரை உலகெங்கும் 150 மில்லியன் பேர் பார்த்து ரசித்தனர்.

உலகக் கால்பந்து

உலகக் கால்பந்து

அடுத்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கால்பந்துப் போட்டித் தொடர் மிகவும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் நடத்திய சர்வேயில் 34 சதவீதம் பேர் போட்டி குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர். மேலும் அவர்களில் அதிகம் பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் ரசிகர்கள் அதிகம்

ஆண் ரசிகர்கள் அதிகம்

பெரும்பாலான பெண்கள் விளையாட்டுக்களை பெண்களை விட ஆண்களே ரசித்துப் பார்க்கின்றனர் என்பதும் எங்களது ஆய்வில் தெரிய வந்த ஒரு முக்கியமான சுவாரஸ்யத் தகவல் ஆகும். டென்னிஸ், கால்பந்து, கோல்ப் என எந்தப் போட்டியை எடுத்தாலும் ஆண்களே அதிகம் பேர் ரசிக்கின்றனர் என்றார் லின்சி.

Story first published: Friday, April 17, 2020, 21:29 [IST]
Other articles published on Apr 17, 2020
English summary
According to a survey, Men are most interested in Women's sports.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X