For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கில்கிறைஸ்ட் ஒன்றும் மந்திரவாதி அல்ல, செட்டிலாக டைம் தேவை-ப்ரீத்தி ஜிந்தா

Preity Zinta
மொஹாலி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ஆடம் கில்கிறைஸ்ட் மிகச் சிறந்த கேப்டன். இருந்தாலும் அவர் ஒன்றும் மந்திரவாதி அல்ல. ஒரே நேரத்தில் அணியை உச்சத்திற்குக் கொண்டு போய் விட முடியாது. அணியின் நிலையைப் பலப்படுத்த அவருக்கு சற்று அவகாசம் தேவை என்று கூறியுள்ளார் அணியின் ஓனர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.

நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, பஞ்சாப் அணி அபாரமாக வீழ்த்தியது. இருப்பினும் தனது முதல் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான புனே வாரியர்ஸிடம் தோற்றுப் போயிருந்தது பஞ்சாப்.

இந்த நிலையில் கில்கிறைஸ்ட்டைப் புகழ்ந்துள்ள ப்ரீத்தி, அவர் அணியை வலுவான நிலைக்குக் கொண்டு செல்வார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில், கில்கிறைஸ்ட் அணியை வலுவான நிலைக்குக் கொண்டு வருவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் மிகச் சிறந்த வீரர், கேப்டன். இருப்பினும் அவர் மந்திரவாதி இல்லை. எனவே சற்று அவகாசம் கண்டிப்பாக தேவை.

இன்னும் பல போட்டிகள் உள்ளன. எனவே அணி பலம் பெறும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

அணியில் உள்ள அனைவருமே தங்களது திறமையை முழுமையாக வெளிக்காட்டி விளையாட வேண்டும். ஒவ்வொரு வீரரின் ஆட்டமும் முக்கியம் என்றார் ப்ரீத்தி ஜிந்தா.

ஐபிஎல்4 மேலும் செய்திகள்

Story first published: Thursday, June 7, 2012, 11:11 [IST]
Other articles published on Jun 7, 2012
English summary
Adam Gilchrist is not a magician and needs time to turn things around for Kings XI Punjab in the Indian Premier League, said Preity Zinta, co-owner of the team. "I am hopeful of a turnaround and know that Gilchrist is a brilliant team leader. But he is not a magician and should be given time to settle down," Zinta. Gilchrist, the former Australian wicketkeeper, is the skipper of Punjab outfit this season after leading Deccan Chargers to victory in the second edition of the Twenty20 league. "We have lot many games left. We will definitely emerge stronger," the Bollywood actress said about her team, adding that "failures are pillars of success".
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X