For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“ஒருமுறை கூட நோ சொல்லல” செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல்வர் ஸ்டாலினின் பங்களிப்பு குறித்து செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் புகழாரம் கொடுத்துள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இதில் இந்திய அணி ஓபன் பிரிவு மற்றும் மகளிர் அணியில் வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

 செஸ் ஒலிம்பியாட் விழா

செஸ் ஒலிம்பியாட் விழா

இதற்காக நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை கொடுத்து கவுரவித்தார். மேலும் இதுபோன்ற ஒரு பிரமாண்ட செஸ் ஒலிம்பியாட் இதுவரை நடைபெற்றதே இல்லை என அயல்நாட்டு வீரர், வீராங்கனைகள் பாராட்டினர்.

முதல்வரின் செயல்பாடுகள்

முதல்வரின் செயல்பாடுகள்

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பங்காற்றல் குறித்து செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் பேசியுள்ளார். அதில், வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இது தான். 130 நாட்களாக நடைபெற்ற ஏற்பாடுகளில் ஒரு முறை கூட இல்லை என்ற பதில் தமிழ்நாடு அரசிடம் இருந்து வரவில்லை. நாங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டன.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

எங்கள் தேவைகளை கேட்டறிந்து அவ்வளவு சிறப்பாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தினார். செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க எங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. இந்த தொடரில் பெண்கள் அணி வெண்கலம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது.

 நன்றி சென்னை

நன்றி சென்னை

பல்வேறு நாடுகளில் இருந்து வந்த வீரர், வீராங்கனைகளுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பு, விருந்தோம்பல் கொடுக்கப்பட்டது. மேலும், அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பு மற்றும் சிறப்பான உணவு வழங்கிய சென்னை மற்றும் தமிழக மக்களுக்கு நன்றி என சஞ்சய் கபூர் கூறினார்.

Story first published: Wednesday, August 10, 2022, 19:50 [IST]
Other articles published on Aug 10, 2022
English summary
AICF President Sanjay kapoor about Chess olympiad ( செஸ் ஒலிம்பியாட் 2022 ) செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திக்கொடுத்த முதல்வர் ஸ்டாலின் குறித்து செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X