For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்.. 0.017 விநாடிகளில் தங்கத்தை இழந்தார் இந்தியாவின் ஆல்பென்!

ஜூனியர் டிராக் சைக்கிளிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் எசோ ஆல்பென் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

டெல்லி: சுவிட்சர்லாந்தில் நடந்த ஜூனியர் டிராக் சைக்கிளிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அந்தமான், நிகோபர் தீவுகளைச் சேர்ந்த எசோ ஆல்பென் வெள்ளிப் பதக்கம் வென்றார். 0.017 விநாடிகளில் தங்கத்தை வெல்லும் வாய்ப்பை அவர் இழந்தார்.

சர்வதேச சைக்கிளிங் சங்கத்தின் சார்பில், ஜூனியர் டிராக் சைக்கிளிங் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் சுவிட்சர்லாந்தில் நடந்தன. இதில் அந்தமான் நிகோபர் தீவுகளைச் சேர்ந்த, 17 வயதாகும் எசோ ஆல்பென் பங்கேற்றார். டிராக் சைக்கிளிங் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். சைக்கிளிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Alben wins silver in junior track cycling world championship

செக் குடியரசின் ஜேகப் ஸ்டாஸ்னி தங்கம் வென்றார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கடைசியில் 0.017 விநாடிகளில் தங்கத்தை வெல்லும் வாய்ப்பை ஆல்பென் இழந்தார். கஜகஸ்தானின் ஆந்தரே சூகோ வெண்கலம் வென்றார்.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் ஆல்பென் பதக்கம் வென்றுள்ளார். டெல்லியில் உள்ள தேசிய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்று வரும் ஆல்பென், ஜூனியர் பிரிவு உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018

சுவிட்சர்லாந்தில் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆல்பென் மற்றும் மயூர் பவார், ஜேம்ஸ் கீதலெக்பம் சிங் அடங்கிய இந்திய அணி, 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பைனலுக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது.

Story first published: Saturday, August 18, 2018, 12:28 [IST]
Other articles published on Aug 18, 2018
English summary
India's esoq alben wins silver in junior track cycling world championship.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X