For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு இன்ச் கூட அதிகமாகாது.. ஒலிம்பிக் பதக்கத்தில் மறைந்திருக்கும் ரகசியம்.. இதுதான் தயாரிக்கும் முறை

ஜப்பான்: ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களுக்கு பின்னால் உள்ள ரகசியம் மற்றும் செய்முறை தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் 2020 போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக்கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒருமுறையாவது பதக்கம் வென்றுவிட வேண்டும் என்பதே வீரர்களின் கனவாக இருக்கும். அப்படிப்பட்ட அந்த பதக்கத்தின் பின்னணி குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

ஒலிம்பிக் 2020 கைவிடப்படுகிறதா? மக்களை விட அதுதான் முக்கியமா?ஜப்பானில் வெடித்த பிரம்மாண்ட போராட்டம்!ஒலிம்பிக் 2020 கைவிடப்படுகிறதா? மக்களை விட அதுதான் முக்கியமா?ஜப்பானில் வெடித்த பிரம்மாண்ட போராட்டம்!

 டிசைனர் யார்?

டிசைனர் யார்?

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளுக்கான பதக்கங்களை டிசைன் செய்வதற்கு கடும் போட்டி நிலவி வந்தது. இதற்காக நடத்தப்பட்ட போட்டியில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட டிசனைர்கள் மற்றும் டிசைனிங் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒலிம்பிக் பதக்கங்களை செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது. அதன்படி தற்போது ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜுனிச்சி கவானிஷி என்பவர் டிசைன் செய்துள்ளார்.

பதக்கத்தில் இடம்பெற்றுள்ளவை

பதக்கத்தில் இடம்பெற்றுள்ளவை

ஒலிம்பிக் பதக்கங்களில் 3 முக்கியமான விஷயங்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அதாவது கிரேக்கர்களுக்கு வெற்றியின் கடவுளாக பார்க்கப்படும் நைக் என்ற பெண் கடவுளின் உருவம் அதில் அச்சிடப்பட்டிருக்கும். இதற்கடுத்ததாக ஒலிம்பிக் போட்டிகளின் அதிகாரப்பூர்வ பெயர் (XXXII Olympaid Tokyo 2020) இடம் பெற்றிருக்கும். அதே போல ஒலிம்பிக்கின் சின்னமாக பார்க்கப்படும் 5 வளையங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

உள் அர்த்தம்

உள் அர்த்தம்

ஒவ்வொரு பதக்கங்களும், வீரர்களும் தினந்தோறும் ஒரு சாதனையாளராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அதாவது கடுமையான கற்கள், கதிரொலியினால் பளபளப்பு அடைந்து சிறப்பாக மாறுவதை கூறுகிறது. அதே போல உலகமெங்கும் விளையாட்டு போட்டிகளுக்காக கடுமையாக உழைப்பவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களையும் பதக்கங்கள் கவுரப்படுத்துகிறது.

எப்படி தயாராகிறது

எப்படி தயாராகிறது

ஒவ்வொரு பதக்கத்தின் விட்டமும் 85 மிமீ அளவில் இருக்கும். தடிமன் ஆனது குறைந்த பட்சம் 7.7மிமீ ஆகவும், அதிகபட்சம் 12.1மிமீ ஆகவும் இருக்கும். தங்கப்பதக்கம் 556 கிராம், வெள்ளி 550 கிராம், வெண்கலம் 450 கிராம் என்ற எடையில் இருக்கும். தங்கப்பதக்கத்தில் 6 கிராம் அளவிற்கு தங்கமும், சுத்தமான வெள்ளியையும் கொண்டு தயார் செய்யப்படுகிறது. வெள்ளிப்பதக்கத்தில் முற்றிலுமாக வெள்ளியை கொண்டே தயார் செய்யப்படுகிறது. வெண்கல பதக்கமானது 95% காப்பர் மற்றும் 5 % சிங் என்ற இரசாயனக்கூறுகளால் உருவாக்கப்படுகிறது.

பதக்கங்களின் ரிப்பன்

பதக்கங்களின் ரிப்பன்

டோக்கியோ 2020ம் ஆண்டுக்காக பதக்க ரிப்பன்கள் ஜப்பானி பாரம்பரிய டிசைன்களில் செய்யப்படுகின்றன. இந்த ரிப்பன்களில் டோக்கியோ ஒலிம்பிக் குறித்து மட்டும் குறிப்பிடப்படாமல், உலக நாடுகளின் ஒற்றுமையை குறிக்கும் வகையிலும் செய்யப்படுகிறது. இதில் சிலிக்கான் கான்வெக்ஸ் எனப்படும் கோடுகள் ரிப்பனின் மீது இருக்கும் என்பதால் ஒரு ரிப்பனை தொடுதல் மூலமே அது எந்த ( தங்கம், வெள்ளி, வெண்கலம்) உலோகம் என்பதை அறிந்துக்கொள்ளலாம்

 பதக்க பெட்டி

பதக்க பெட்டி

டோக்கியோ 2020ம் ஆண்டுக்காக பதக்க ரிப்பன்கள் ஜப்பானி பாரம்பரிய டிசைன்களில் செய்யப்படுகின்றன. இந்த ரிப்பன்களில் டோக்கியோ ஒலிம்பிக் குறித்து மட்டும் குறிப்பிடப்படாமல், உலக நாடுகளின் ஒற்றுமையை குறிக்கும் வகையிலும் செய்யப்படுகிறது. இதில் சிலிக்கான் கான்வெக்ஸ் எனப்படும் கோடுகள் ரிப்பனின் மீது இருக்கும் என்பதால் ஒரு ரிப்பனை தொடுதல் மூலமே அது எந்த ( தங்கம், வெள்ளி, வெண்கலம்) உலோகம் என்பதை அறிந்துக்கொள்ளலாம்

Story first published: Tuesday, June 29, 2021, 21:10 [IST]
Other articles published on Jun 29, 2021
English summary
Complete Details that you need to know about Tokyo 2020 Olympic Medal Design
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X