ஐபிஎல் வருது.. உஷாரான அமேசான், ப்ளிப்கார்ட்.. செம டிஸ்கவுன்ட் சேல்.. நள்ளிரவு முதல் வேட்டை ஆரம்பம்!

மும்பை : இந்திய பொருளாதாரம் கொரோனா வைரஸ் காரணமாக மந்த நிலையில் இருக்கிறது. ஐபிஎல் தொடர் ஓரளவு இந்திய பொருளாதரத்தை மீட்கும் என சிலர் கூறி வருகின்றனர்.

2020 ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ளது. தீபாவளியுடன் ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அமேசான், ப்ளிப்கார்ட் இரண்டும் தள்ளுபடி விற்பனையை நடத்த உள்ளன.

ஐபிஎல்-லுக்கு முன்னாடியே தினமும் அதிரடி டி20 மேட்ச் பார்க்கணுமா? ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10 வரை!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அதிகமாக பரவத் துவங்கியது. அப்போது கடுமையான லாக்டவுன் விதிகள் அமல்படுத்தப்பட்டன. பலர் தங்கள் வேலையை இழந்தனர். பலருக்கும் குறைந்த சம்பளம் மட்டுமே கிடைத்தது.

மந்த நிலை

மந்த நிலை

மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்தது. இந்திய பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அதிக அளவிலான மக்கள் செலவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஐபிஎல் தொடர் நடந்தால் கிரிக்கெட்டை விரும்பும் பெரும்பாலான மக்கள் இயல்பு நிலைக்கு வரக் கூடும்.

அமேசான், ப்ளிப்கார்ட் விற்பனை

அமேசான், ப்ளிப்கார்ட் விற்பனை

இந்த நிலையில் தீபாவளிக்கு முன் அமேசான், ப்ளிப்கார்ட் தங்கள் தளத்தில் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்து தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. ஆகஸ்ட் 6 அன்று துவங்கும் இந்த சிறப்பு விற்பனை அமேசானில் இரு நாட்களுக்கும், ப்ளிப்கார்ட்டில் நான்கு நாட்களுக்கும் நடைபெற உள்ளது.

ஏன் தள்ளுபடி விற்பனை?

ஏன் தள்ளுபடி விற்பனை?

லாக்டவுன் முதல் விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை விற்க முடியாமல் தவித்து வருவதால் அவர்கள் தங்கள் பொருட்களை விற்று முதலை திரும்பப் பெறும் முயற்சியாகவும் இந்த தள்ளுபடி விற்பனை அமைந்துள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தீபாவளி திட்டம்

தீபாவளி திட்டம்

தற்போது சிறப்பு விற்பனையில் பணம் ஈட்டினால் மட்டுமே தீபாவளி காலகட்டத்தில் விற்பனையாளர்கள் அதிக பொருட்களை விற்பனை செய்ய முடியும். அடுத்த வாரத்தில் கிருஷ்ண ஜெயந்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Amazon, Flipkart getting ready for T20 sale. IPL 2020 is about to begin in September.
Story first published: Wednesday, August 5, 2020, 22:07 [IST]
Other articles published on Aug 5, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X