ஒரே வாரத்தில் இரண்டாவது பதக்கம் வென்று ஆனந்த் அசத்தல்

By Staff

ரியாத்: காணாமல் போய்விட்டார் என்று கூறப்பட்ட நிலையில், அரசியலில் குதிப்பதாக ரஜினி அறிவித்தது போல, ஒரே வாரத்தில் இரண்டு பதக்கங்களை வென்று விஸ்வநாதன் ஆனந்த் அசத்தியுள்ளார்.

உலக விரைவு செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று கடந்த வாரம் அசத்திய விஸ்வநாதன் ஆனந்த், அதைத் தொடர்ந்து நடந்த உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருதினப் போட்டி, டி-20 போட்டிகள் இருப்பதைப் போல, கிளாசிக் போட்டி, ரேபிட் எனப்படும் விரைவு செஸ் போட்டிக்கு அடுத்தபடியாக மிகவும் குறைந்த நேரத்தில் விளையாடக் கூடிய உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.

ரேபிட் செஸ் போட்டியில், ஒரு ஆட்டத்துக்கு 15 நிமிடங்களும், கூடுதலாக ஒவ்வொரு நகர்த்தலுக்கும், 10 விநாடிகளும் அளிக்கப்படும். அதே நேரத்தில் பிளிட்ஸ் போட்டியில், மூன்று நிமிடங்களும், ஒவ்வொரு நகர்த்தலுக்கு, 2 விநாடிகளும் அளிக்கப்படும்.

மின்னல் வேக விளையாட்டு

அதாவது மின்னல் வேகத்தில் விளையாட வேண்டும். இவ்வாறு மொத்தம், 21 சுற்றுகளில், ஒரே ஒரு சுற்றில் மட்டும் தோல்வி சந்தித்து, 14.5 புள்ளிகள் எடுத்து, மூன்றாவது இடத்தை ஆனந்த் பிடித்தார்.

லண்டனில் நடந்த உலக கிளாசிக் செஸ் போட்டியில் கடைசி இடத்தைப் பிடித்திருந்த ஆனந்த், ராபிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், பிளிட்ஸ் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளது அசாத்தியமானது.

உலக கிளாசிக் செஸ் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், பிளிட்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார். ரஷியாவின் செர்கே கர்ஜாகின் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இரண்டு நாட்கள் நடந்த இந்தப் போட்டியில், ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆனந்த், முதல் நாளில், 11 ஆட்டங்களில் 7 புள்ளிகளைப் பெற்றார். இரண்டாவது நாளில், 10 ஆட்டங்களில், 7.5 புள்ளிகளைப் பெற்றார்.

இந்தப் போட்டியில் இந்தியாவின் பி. ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி தலா, 12.5 புள்ளிகளைப் பெற்றனர். பி.அதிபன், 11 புள்ளிகளும், சூர்ய சேகர் கங்குலி, எஸ்.பி. சேதுராமன் தலா, 10 புள்ளிகளைப் பெற்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Another medal for Anand in a week
Story first published: Tuesday, January 2, 2018, 11:23 [IST]
Other articles published on Jan 2, 2018
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X