For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"அவர் மனைவியாக கிடைத்தது என் பாக்கியம்".. ஒலிம்பிக் வெற்றிக்கு பிறகு.. அட்டானு தாஸ் நெகிழ்ச்சி

டோக்கியோ: தீபிகா என் மனைவியாக கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்று நெகிழ்ந்து பேசியுள்ளார் அட்டானு தாஸ்.

ஒலிம்பிக் போட்டிகள் சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றன. ஜப்பான், அமெரிக்கா, சீனா இடையே தங்கப் பதக்கங்களுக்காக கடும் போட்டி நிலவுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வென்ற வெள்ளிப்பதக்கம் மட்டுமே நம் வசம் உள்ளது.

திரில் போட்டி.. தென்கொரிய வில்வித்தை ஜாம்வானையே வீழ்த்திய அட்டானு தாஸ்.. அடுத்த சுற்றுக்கு தகுதி! திரில் போட்டி.. தென்கொரிய வில்வித்தை ஜாம்வானையே வீழ்த்திய அட்டானு தாஸ்.. அடுத்த சுற்றுக்கு தகுதி!

 சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இந்த நிலையில், இன்று நடந்த ஹாக்கி, பேட்மிண்டன், வில்வித்தை என்று பல போட்டிகளில் இந்தியா வெற்றிவாகை சூடியுள்ளது. குறிப்பாக வில்வித்தை பிரிவில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. இன்று நடந்த போட்டியில் ஆண்கள் வில்வித்தை அணியில் இந்தியாவின் அட்டானு தாஸ், 1/32 வெளியேற்றுதல் பிரிவில் சீன தைபே வீரரை 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார். பிறகு, கொரிய வீரர் ஜின்-ஹய்க் என்பவரை 1/16 வெளியேற்றுதல் சுற்றில் அட்டானு தாஸ் சந்தித்தார். இதில் முதல் செட்டில் 25-26 என்ற கணக்கில் அட்டானு இழந்தார்.

 மனைவி தீபிகா

மனைவி தீபிகா

பிறகு இரண்டாவது செட் 27 - 27 என்று டிராவானது. இதனால், 1-3 என்று கொரிய வீரர் முன்னிலை வகித்தார். இதையடுத்து நடந்த மூன்றாவது செட்டும் 27 - 27 என்று டிராவானது. இதனால், 2- 4 என்று மீண்டும் கொரிய வீரர் முன்னிலை பெற்றார். பிறகு நான்காவது செட்டை அட்டானு தாஸ் கைப்பற்ற 4-4 என்று ஆட்டம் சூடுபிடித்தது. இதில், கணவர் அட்டானு தாஸ் சிறப்பாக செயல்பட மிக முக்கிய காரணமாக இருந்தவர், மனைவியும் வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி தான். ஒவ்வொரு முறை தனது கணவர் சறுக்கும் போதும், புள்ளிகளை குவிக்கும் போதும் என இரண்டு தருணங்களிலும் பக்கபலமாக இருந்து கணவரை என்கரேஜ் செய்து கொண்டே இருந்தார்.

 நீ அதைச் செய்ய முடியும்

நீ அதைச் செய்ய முடியும்

இறுதியில், சிறப்பாக செயல்பட்ட அட்டானு தாஸ், இப்போட்டியில் வென்று pre-quarters ஆட்டத்துக்கு முன்னேறினார். தனது இந்த சிறப்பான வெற்றி குறித்து போட்டி முடிந்து பேசிய அட்டானு தாஸ், "நான் தீபிகா சொல்வது முழுவதைம் கேட்டுக்கொண்டிருந்தேன். அவள் [தீபிகா குமாரி] என்னைத் சிறப்பாக விளையாட தூண்டினாள். 'உன்னை நம்பு', 'நீ அதைச் செய்ய முடியும்', அமைதியாக இருந்து நிலைமையைக் கையாளுங்கள்' என்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தாள். அவர் உலக நம்பர் ஒன் வீராங்கனை. அவரை என் மனைவியாக பெற்றது என் பாக்கியம். அவரது வார்த்தைகள் எனக்கு ஒரு பெரிய ஆதரவும் ஊக்கமும் அளித்தது.

 தனியாக உள்ளோம்

தனியாக உள்ளோம்

கலப்பு அணியில் என் மனைவியுடன் இணைந்து விளையாடுவேன் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது சாத்தியமாகவில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது மிகவும் திருப்திகரமாக இருக்கிறது (நாங்கள் இருவரும் கடைசி -16 இல் இருப்பதால்). நாங்கள் எங்களால் முடிந்ததை வழங்குகிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நான் ஆண்கள் அணியுடன் தங்கியிருக்கிறேன். தீபிகா டோக்கியோ கிராமத்தில் தனியாக தங்கியுள்ளார், ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். தயவுசெய்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். தயவுசெய்து எங்களை ஊக்குவிக்கவும். எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று நடந்த ஆட்டத்தில், தீபிகா குமாரி அட்டகாசமாக விளையாடி, அடுத்தடுத்து சுற்றுகளுக்கு தகுதிப் பெற்றிருக்கும் நிலையில், தற்போது கணவரையும் காலிறுதிக்கு முந்தைய போட்டிக்கு கூட்டிச் சென்றுவிட்டார். இந்த காதல் தம்பதி, ஒலிம்பிக்கில் மெடல் வென்றால் அதைவிட சிறந்த வாழ்நாள் பரிசு அவர்களுக்கு அமைந்துவிடாது.

Story first published: Thursday, July 29, 2021, 18:52 [IST]
Other articles published on Jul 29, 2021
English summary
archery Atanu das about his wife Deepika - தீபிகா குமாரி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X