For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வில்வித்தையில் 3 தங்கம்.. "வித்தை"-ன்னா இப்படி இருக்கணும் - தென் கொரியாவின் "சூரி" ஆன் சான்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இன்று ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆம்! ஒலிம்பிக் ஒன்றாலே சாதனைகள் தானே!

டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்தியா சார்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வில்வித்தை பிரிவின் போட்டியில், இந்தியா தோல்வியை சந்தித்தது.

வில்வித்தை பிரிவில், இந்தியாவின் சார்பில் காலிறுதிப் போட்டியில் இன்று களமிறங்கிய தீபிகா குமாரி, தென் கொரியாவின் ஆன் சானிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

இந்தியாவுக்கு 3வது பதக்கம்.. பேட்மிண்டனில் உறுதி செய்தார் பிவி.சிந்து.. அரையிறுதிக்கு முன்னேற்றம்! இந்தியாவுக்கு 3வது பதக்கம்.. பேட்மிண்டனில் உறுதி செய்தார் பிவி.சிந்து.. அரையிறுதிக்கு முன்னேற்றம்!

 பெரும் நம்பிக்கை

பெரும் நம்பிக்கை

தீபிகா குமாரி.. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர். ஒலிம்பிக்கில் அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றியை வசப்படுத்தி, காலிறுதி வரை முன்னேறி இந்தியர்களின் பல்ஸை எகிற வைத்தவர். இந்த நிலையில் இன்று பெண்கள் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றும், பிறகு காலிறுதி போட்டிகளும் நடந்தது. இதில் தீபிகா எளிதாக தென்கொரிய வீரர் ஜென்க் ஓவை வீழ்த்தி வெற்றி பெற்றார். 6-5 என்ற புள்ளி கணக்கில் தீபிகா வென்றார். இதன் மூலம் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதனால் நிச்சயம் தீபிகா இந்த ஒலிம்பிக்கில் மெடல் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 தீபிகா தோல்வி

தீபிகா தோல்வி

ஆனால் பெண்கள் பிரிவில் தென் கொரியாவின் ஆன் சானிடம் தீபிகா குமாரி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார். 6-0 புள்ளிகள் கணக்கில் காலிறுதி ஆட்டத்தில் தீபிகா குமாரி தோல்வி அடைந்தார். 30-27, 26-24, 26-24 என்ற புள்ளிகளை பெற்று மொத்தமாக 6-0 புள்ளிகள் கணக்கில் காலிறுதி ஆட்டத்தில் தீபிகா குமாரி தோல்வி அடைந்தார். இதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை நழுவவிட்டு தீபிகா குமாரி வெளியேறினார். அவரது பதக்க கனவும் முடிவுக்கு வந்தது.

 முக்கியஸ் டிப்ஸ்

முக்கியஸ் டிப்ஸ்

இவரது கணவர் அட்டானு தாஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் வில்வித்தை காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ள நிலையில், மனைவி தீபிகா குமாரி, ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறி இருப்பது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. முன்னதாக நேற்று நடந்த ஒலிம்பிக் போட்டிகளில், கணவர் அட்டானு தாஸ் வெற்றிப் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். கணவர் விளையாடிக் கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் ஸ்டாண்டில் இருந்து தனது வார்த்தைகளால் கணவரை அற்புதமாக விளையாட வைத்தார். ஒருக்கட்டத்தில், தீபிகாவின் சில டிப்ஸ்கள், அட்டானுவுக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆகின.

 எனது பாக்கியம்

எனது பாக்கியம்

போட்டி முடிந்த பிறகு பேசிய அட்டானு தாஸ், ""நான் தீபிகா சொல்வது முழுவதைம் கேட்டுக்கொண்டிருந்தேன். தீபிகா குமாரி என்னை சிறப்பாக விளையாட தூண்டினாள். 'உன்னை நம்பு', 'நீ அதைச் செய்ய முடியும்', அமைதியாக இருந்து நிலைமையைக் கையாளுங்கள்' என்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தாள். அவர் உலக நம்பர் ஒன் வீராங்கனை. அவரை என் மனைவியாக பெற்றது என் பாக்கியம். அவரது வார்த்தைகள் எனக்கு ஒரு பெரிய ஆதரவும் ஊக்கமும் அளித்தது. தனியாக உள்ளோம் கலப்பு அணியில் என் மனைவியுடன் இணைந்து விளையாடுவேன் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது சாத்தியமாகவில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது மிகவும் திருப்திகரமாக இருக்கிறது (நாங்கள் இருவரும் கடைசி -16 இல் இருப்பதால்). நாங்கள் எங்களால் முடிந்ததை வழங்குகிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நான் ஆண்கள் அணியுடன் தங்கியிருக்கிறேன். தீபிகா டோக்கியோ கிராமத்தில் தனியாக தங்கியுள்ளார், ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். தயவுசெய்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். தயவுசெய்து எங்களை ஊக்குவிக்கவும். எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை" என்று தெரிவித்திருந்தார்.

 ரஷ்யாவுக்கு வெள்ளி

ரஷ்யாவுக்கு வெள்ளி

இந்த சூழலில் தான் இன்று களமிறங்கிய தீபிகா காலிறுதியில் தோற்று வெளியேறியிருக்கிறார். இவரைத் தோற்கடித்தவர், தென் கொரியாவின் நட்சத்திர வீராங்கனை ஆன் சான். இவர் தீபிகாவை வெளியேற்றியது மட்டுமில்லாமல், வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கத்தையும் வென்று மிரள வைத்திருக்கிறார். ரஷ்ய வீராங்கனை எலேனா ஒசிபோவா வெள்ளிப்பதக்கம் வெல்ல, இத்தாலியின் லூஸிலா போரி வெண்கலம் வென்றார்.

 முதல் வில்வித்தை வீராங்கனை

முதல் வில்வித்தை வீராங்கனை

இந்த வெற்றியின் மூலம், ஒலிம்பிக்கில் single Gamesல் மூன்று தங்கப்பதக்கங்கள் வென்ற முதல் வில்வித்தை வீராங்கனை எனும் சாதனையையும் ஆன் சான் படைத்திருக்கிறார். ஆம்! டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் பெண்கள் அணி, கலப்பு அணி மற்றும் தனிப்பட்ட நிகழ்வு என மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி, டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் போது பெண்களின் தனிப்பட்ட வில்வித்தை தரவரிசை சுற்றில் 680 புள்ளிகளுடன் ஒரு புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்திருக்கிறார்.

Story first published: Friday, July 30, 2021, 16:51 [IST]
Other articles published on Jul 30, 2021
English summary
archery South Korea's An San wins her third gold - ஒலிம்பிக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X