For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போட்டியில் தோற்றாலும்.. வாழ்க்கையில் ஜெயிச்சாச்சு - ஒலிம்பிக்கில் அரங்கேறிய "காதல்" கண்ணாமூச்சி

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அரங்கேறி வரும் பல சுவாரஸ்ய சம்பவங்களை ஓவர்டேக் செய்துள்ளது இந்த "காதல்" சம்பவம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் தொடரில், ஒவ்வொரு நாடுகளும் பதக்கங்களை வெல்வதில் முனைப்புடன் செய்லபட்டு வருகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை, பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். எனினும், அதன்பிறகு இந்தியா இரண்டாவது மெடலை கைப்பற்ற போராடி வருகிறது.

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறை.. 1,500-meter நீச்சல் போட்டி.. தங்கம் வென்று சாதித்த முதல் பெண்ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறை.. 1,500-meter நீச்சல் போட்டி.. தங்கம் வென்று சாதித்த முதல் பெண்

 வீராங்கனை மீது காதல்

வீராங்கனை மீது காதல்

இந்நிலையில், ஒலிம்பிக் தொடரில் நடந்தேறிய இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏதோ போட்டி தொடர்பான சாதனைன்னு நினைச்சுடாதீங்க.. லவ் மேட்டர் இது. தனது காதலை ஒருவர் எங்கு வந்து வெளிப்படுத்தி இருக்கிறார் பாருங்க. அதுவும் ஒரு வீராங்கனையிடம்.

 பெரும் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றம்

ஆம்! அர்ஜென்டினா அணியின் Fencing வீராங்கனை Maria Belen Perez Maurice கடந்த ஜுலை 26ம் தேதி நடந்த போட்டியில், ஹங்கேரியின் அன்னா மார்ட்டன் என்பவரிடம் தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார். எப்படியும் ஜெயித்துவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்த மரியாவுக்கு இந்த தோல்வி பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

 கட்டியணைத்து முத்தம்

கட்டியணைத்து முத்தம்

எனினும், போட்டி முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் நின்றிருந்த ஒருவர், கையில் பதாகை ஒன்றை வைத்து, அதில் ஏதோ எழுதி நின்றுக் கொண்டிருக்க, திருதிருவென முழித்த கேமராமேன், "கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்க மேடம்" என்று சொல்ல, ஒன்றும் புரியாமல் திரும்பிய மரியா ஒரு நொடி திகைத்து நிற்க, பிறகு நிதானத்துக்கு வந்து, பதாகை வைத்திருந்த நபரை கட்டியணைத்து முத்தமிட்டார்.

 திருமணம் செய்ய தயாரா?

திருமணம் செய்ய தயாரா?

பிறகு தான் விஷயமே தெரிந்தது. அந்த நபர் மரியாவின் Fencing பயிற்சியாளர் என்று. இருவரும் 17 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். இப்போது இந்த ஒலிம்பிக் தொடரில், மரியா தோல்வி அடைந்தாலும், இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்று, "என்னை திருமணம் செய்து கொள்ள தயாரா?" என்று அந்த பதாகையை எழுதி, Marriage Proposal கொடுத்திருக்கிறார்.

 வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

அதற்கு மரியா அந்த நொடியே "எஸ்" என்று பதில் அளித்து முத்தத்தை பகிர்ந்து கொள்ள, தோல்வி மறந்து, சோகம் மறந்து அந்த இடமே கலகலப்பானது. அடுத்த வருஷம் திருமதி. மரியாவா வந்து மெடலை தட்டிச் செல்ல இப்போதே வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுவோம்.

Story first published: Wednesday, July 28, 2021, 12:39 [IST]
Other articles published on Jul 28, 2021
English summary
Argentinian fencer dramatic marriage proposal - ஒலிம்பிக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X