For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாடிபில்டர் பரிதாபங்கள்.. அர்ஜுனா விருது வென்ற பாஸ்கரன் மனைவியிடம் ஒரு கலகல பேட்டி!

சென்னை : அர்ஜுனா விருது வென்ற தமிழகத்தை சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனின் மனைவி, பாடிபில்டிங் செய்வதில் உள்ள கஷ்டங்களை சாமானியர்களுக்கு புரியும் வகையில் கலகலப்பாக கூறி இருக்கிறார்.

ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு பேட்டி அளித்த பாஸ்கரனின் மனைவி, ஒரு பாடிபில்டரின் மனைவியாக தனது அனுபவங்களை கூறினார்.

Arjuna Award Winner Baskaran wife explains her worries over body building

சுமார் 20 ஆண்டுகள் கழித்து பாடிபில்டிங் துறைக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது. அதை தட்டிச் சென்றவர் தமிழகத்தின் பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கடுமையான உழைப்புக்கு தான் இந்த வெகுமதி கிடைத்துள்ளது.

அவரது உழைப்பு மற்றும் தியாகம் குறித்து அவர் மனைவி கூறிய சில விஷயங்கள் இங்கே - பாஸ்கரன் எப்போதும் ஜிம்மே கதி என்று இருப்பார். வீட்டிலேயே பெரும்பாலும் இருக்க மாட்டார். நடைபயிற்சி, உடற்பயிற்சி என எப்போதும் கடின உழைப்புடனே இருக்க வேண்டும்.

அவருக்கு தனி சமையல் செய்ய வேண்டும். அது சாப்பிடும் படி இருக்காது. உப்பு, எண்ணெய், மசாலா இல்லாமல், அவித்து பச்சைக்கறியாக உண்பார். நம்மால் அதை சாப்பிடவே முடியாது. பார்க்கவே முடியாது. அவர் எப்படி இதை உண்கிறார் என ஆச்சரியமாக இருக்கும்.

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். அந்த உப்பையே போடாமல் சாப்பிடுவார். இதை விட பெரிய கொடுமை என்னவென்றால், பாடிபில்டிங் போட்டிக்கு முன்னதாக தண்ணீர் அருந்த மாட்டார். நீரில் பஞ்சை நனைத்து, காய்ந்து போன உதடுகளில் தடவிக் கொள்வார்.

சில விஷயங்களை தியாகம் செய்தால் தான் அதற்கு பலன் கிடைக்கும். அர்ஜுனா விருது கிடைத்த உடன் பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து விட்டது என கூறி இருக்கிறார் பாஸ்கரனின் மனைவி.அவர் மேலும் பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவரது பேட்டி வீடியோ:

Story first published: Tuesday, September 24, 2019, 7:47 [IST]
Other articles published on Sep 24, 2019
English summary
Arjuna Award Winner Baskaran wife explains her worries over body building in a special interview to OneIndia Tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X