“ஆத்தாடி.. இவ்ளோ உயரமா?? ” போல் வால்ட்டில் உலக சாதனை படைத்த ஸ்வீடன் வீரர்.. வியப்பில் ரசிகர்கள்!

ஸ்வீடன்: போல் வால்ட் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து வியக்கவைத்துள்ளார் ஆர்மண்ட் டூப்ளாண்டிஸ்.

பிரபல போல்ட் வால்ட் டைமண்ட் லீக் மீட் ஸ்வீடன் நகரத்தில் உள்ள ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் ஸ்டேடியமில் நடைபெற்றது.

இந்த போட்டியில் தான் ஸ்வீடிஸ் ஒலிம்பிக் சாம்பியன் ஆர்மண்ட் டூப்ளண்டிஸ் உலக சாதனை படைத்தார்.

அவுட்டூர் போல் வால்ட் என்ற பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் வால்டர் ஆர்மண்ட் டூப்ளண்டிஸ் 6.16 மீட்டர் உயர்த்தை தனது முந்தைய உலக சாதனையை முறியடித்தார். இதற்கு முன்னதாக அவர் கடந்த 2020ம் ஆண்டு ரோம் நகரத்தில் நடைபெற்ற 6.15 மீட்டர் உயரத்தை தாண்டியிருந்தார்.

எனினும் டூப்ளண்டிஸ் இதில் முக்கிய சாதனை ஒன்றை தவறவிட்டுள்ளார். அதாவது இண்டூர் போல் வால்ட்டில் அவர் 6.20 மீட்டர் உயர்த்தை தாண்டி உலக சாதனை படைத்திருந்தார். அதனை அவுட்டூரில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிறைவேறாமல் போனது.

இதுகுறித்து பேசிய அவர், எனக்கு இது மிகவும் ஸ்பெஷலான தருணமாகும். எனது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஸ்வீடன் மக்கள் ஆகியோர் தான் எனது திறமையை எனக்கே அடையாளம் காட்ட முக்கிய காரணமாக அமைந்தனர் என மகிழ்ச்சி தெரிவித்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Armand Duplantis world record in outdoor pole vault ( போல் வால்ட்டில் ஆர்மண்ட் டூப்ளண்டிஸ் உலக சாதனை ) போல் வால்ட் போட்டியில் ஆர்மண்ட் டூப்ளண்டிஸ் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
Story first published: Monday, July 4, 2022, 11:30 [IST]
Other articles published on Jul 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X