For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய மன்ப்ரீத் கவுருக்கு 4 ஆண்டுகள் தடை... பதக்கமும் பறிப்பு?

டெல்லி: இந்தியாவின் குண்டு எறிதல் வீராங்கனை மன்ப்ரீத் கவுருக்கு தேசிய ஊக்க மருந்து ஒழுங்கு ஆணையம் நான்கு ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

2017ம் ஆண்டு புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரின் குண்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்று தேசிய சாதனை படைத்தவர் மன்ப்ரீத் கவுர். இதை தொடர்ந்து, ரத்த மாதிரிகள் ஊக்கமருந்து பரிசோதனைக்கு அனுப்பபட்டன.

Asian champion manpreet kaur banned for four years

2017ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய கிராண்ட் ப்ரிக்ஸ் தொடரில் தங்கம் வென்றார். மேலும், பாட்டியாலாவில் நடைபெற்ற பெடரேசன் கோப்பை, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் உள்ளிட்ட அனைத்திலும் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஷிப் தொடரின்போது எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. அந்த போட்டியில் பயன்படுத்திய மருந்தின் தாக்கம், அடுத்தடுத்த போட்டிகளிலும் மன்ப்ரீத் கவுரிடம் இருப்பது அறியப்பட்டுள்ளது.

Asian champion manpreet kaur banned for four years

சேப்பாக்கம் பிட்சில் இனிமே விளையாட மாட்டோம்...! தல தோனி அதிரடி... காரணம் இதுதான் சேப்பாக்கம் பிட்சில் இனிமே விளையாட மாட்டோம்...! தல தோனி அதிரடி... காரணம் இதுதான்

இதனையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து தேசிய ஊக்கமருந்து தடுப்புக்குழு தீவிர விசாரணை நடத்தியது. விசாரணையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானதையடுத்து, 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

தடை எதிரொலியாக ஆசிய சாம்பியன்ஷிப் தொடருக்கு பின்னர், மன்ப்ரீத் கவுர் வென்ற அனைத்து பதக்கங்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு மன்ப்ரீத் கவுருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, April 10, 2019, 10:28 [IST]
Other articles published on Apr 10, 2019
English summary
Asian champion manpreet kaur banned for four years.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X