For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு : இன்று 7ஆம் நாள்... இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன?

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 18 தொடங்கியது. செப்டம்பர் 2 வரை நடக்க உள்ளது. இந்தியா இது வரை 25 பதக்கங்கள் வென்று பட்டியலில் எட்டாவது இடத்தில உள்ளது. இதில் ஆறு தங்கங்கள் அடங்கும்.

நேற்று ஆறாம் நாள், இந்தியா இரண்டு தங்கங்கள் உட்பட, ஏழு பதக்கங்கள் வென்றது. மகளிர் கபடி இறுதிப் போட்டியில் ஈரான் அணியிடம் தோல்வி, ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி என பல அதிர்ச்சிகளும் அரங்கேறின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி நேற்று ஏமாற்றினார்.

Asian Games 2018 - Indias schedule for Day 7 here

இந்நிலையில் இன்று ஏழாம் நாள் ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் அட்டவணையை கீழே காணலாம்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018

வில்வித்தை

காலை 8.00 - ரீகர்வ் மகளிர் அணி தகுதி நீக்கச் சுற்று - இந்தியா x மங்கோலியா

காலை 9.20 - ரீகர்வ் ஆடவர் அணி தகுதி நீக்கச் சுற்று - இந்தியா x வியட்நாம்

தடகளம்

காலை 9.00 - ஆடவர் உயரம் தாண்டுதல் தகுதிச் சுற்று

காலை 9.40 - ஆடவர் 400மீட்டர் தகுதிச் சுற்று

மாலை 5.10 - மகளிர் ஹேமர் த்ரோ

மாலை 5.15 - ஆடவர் நீளம் தாண்டுதல்

மாலை 6.00 - மகளிர் 100மீட்டர் தகுதிச் சுற்று

மாலை 6.30 - ஆடவர் ஷாட் புட் இறுதிச் சுற்று

மாலை 6.30 - மகளிர் 10,000மீட்டர் இறுதிச் சுற்று

மாலை 7.05 - மகளிர் 400மீட்டர் தகுதிச் சுற்று

பாட்மிண்டன் (மதியம் 12.00 தொடங்கும்)

ஆடவர் இரட்டையர் - 16 நபர்கள் சுற்று - சிராக் ரெட்டி, ராங்கி ரெட்டி இணை

மகளிர் ஒற்றையர் - 16 நபர்கள் சுற்று - சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து

மகளிர் இரட்டையர் காலிறுதி - பொன்னப்பா, ரெட்டி இணை

குத்துச்சண்டை

மதியம் 2.15 - மகளிர் லைட் 60 கிலோ - 16 நபர்கள் சுற்று - பவித்ரா

கேனோ/காயக் ஸ்பிரின்ட்

காலை 7.30 - கேனோ TBR 200மீட்டர் - ஆடவர் பிரிவு

காலை 7.30 - கேனோ TBR 200மீட்டர் - மகளிர் பிரிவு

கோல்ப்

காலை 4.30 - மகளிர் தனிப் பிரிவு 3

காலை 4.30 - மகளிர் குழுப் பிரிவு 3

காலை 5.33 - ஆடவர் தனிப் பிரிவு 3

காலை 5.33 - ஆடவர் குழுப் பிரிவு 3

மகளிர் கைப்பந்து

மதியம் 12.30 - இந்தியா x மலேசியா

மகளிர் ஹாக்கி

மாலை 6.30 - இந்தியா x கொரிய குடியரசு

துப்பாக்கி சுடுதல்

காலை 6.30 - ஸ்கீட் - மகளிர் பிரிவு தகுதிச் சுற்று

காலை 7.00 - ஸ்கீட் - ஆடவர் பிரிவு தகுதிச் சுற்று

காலை 7.30 - 25மீட்டர் ரேபிட் ஃபையர் பிஸ்டல் - ஆடவர் பிரிவு

ஸ்குவாஷ்

மதியம் 1.30 - மகளிர் ஒற்றையர் அரையிறுதி - தீபிகா பல்லிகல்

மதியம் 2.30 - மகளிர் ஒற்றையர் அரையிறுதி - ஜோஷ்னா சின்னப்பா

மதியம் 3.30 - ஆடவர் ஒற்றையர் அரையிறுதி - சௌரவ் கோஷல்

வாலிபால்

காலை 7.30 - ஆடவர் பிரிவு - இந்தியா x மாலத்தீவு

மாலை 5.30 - மகளிர் பிரிவு - இந்தியா x சீன தைபெய்

செபக்டக்ராவ்

மதியம் 2.00 - ஆடவர் ரேகு - இந்தியா x கொரியா

Story first published: Saturday, August 25, 2018, 12:58 [IST]
Other articles published on Aug 25, 2018
English summary
Asian Games 2018 - India's schedule for Day 7 here. India got 25 medals so far.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X