For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு : டேபிள் டென்னிஸில் முதல் பதக்கம்.. ஆடவர் அணி வெண்கலம் வென்றது

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன் முறையாக டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது. இன்று இந்தியாவிற்கு இது நான்காவது பதக்கமாகும்.

ஆடவர் அணி டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியா அணியில் சத்தியன், சரத் கமல், அந்தோணி அமல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மூவருமே கொரிய அணியினரிடம் தோல்வி அடைந்தனர். இதனையடுத்து, கொரியா 3-0 என வெற்றி பெற்றது.

Asian Games 2018 – Table Tennis men team won bronze after losing semifinal match

இந்தியா வெண்கலம் மட்டுமே வென்றது. நேற்று ஆடவர் அணிக்கு ஒரே நாளில் மூன்று போட்டிகளில் ஆடும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால், சிறிது அதிருப்தி அடைந்தனர் இந்திய வீரர்கள். எனினும், நேற்று மூன்று போட்டியிலும் வென்று அசத்தினர்.

அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்தனர். இன்று நடந்த அரையிறுதியில் வலிமையான கொரியா அணியிடம் தோல்வி அடைந்துள்ளனர்.

இதற்கு முன்பு இன்று, மகளிர் பாட்மிண்டன் இறுதியில் தோற்ற சிந்து வெள்ளி வென்றார். வில்வித்தை அணிப் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிர் அணி இரண்டும் வெள்ளி வென்றது.

Story first published: Tuesday, August 28, 2018, 17:09 [IST]
Other articles published on Aug 28, 2018
English summary
Men’s team in Table Tennis won bronze after losing semifinal match at Asian games.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X