For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு.. அதிர்ச்சியில் வீரர், வீராங்கனைகள்.. உண்மை காரணம் என்ன?

சீனா: ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் வீரர், வீராங்கனைகள் சோகமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு பிறகு தற்போது தான் பிரபல விளையாட்டு போட்டிகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

அந்தவகையில் புகழ்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

Asian games 2022 are postponed indefinitely, Bad news for athletes

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவு நகரில் செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்தது. இதே போல ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளும் நடைபெறவதாக இருந்தன. இதற்காக அந்நகரில் சுமார் 56 போட்டித் தளங்களை அமைத்துள்ளனர்.

சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக புதிய வகையான ஓமிக்ரான் கொரோனா பரவல் தான் அச்சுறுத்தலாக உள்ளது. இதனையடுத்து சீனாவிலும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதான் ஆசிய போட்டிகளை ஒத்திவைப்பதற்கான காரணமாக இருக்கும் எனத்தெரிகிறது.

ஏற்கனவே குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடிக்கப்பட்டது. இதனால் ஆசிய போட்டிகளும் நடைபெறும் என வீரர், வீராங்கனைகள் காத்திருந்தனர். ஆனால் தற்போது ஆசிய போட்டிகளை மட்டும் தள்ளிவைத்துள்ளதால் வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, May 6, 2022, 15:14 [IST]
Other articles published on May 6, 2022
English summary
Asian games 2022 postponed ( ஆசிய விளையாட்டுப்போட்டிகள் ஒத்திவைப்பு ) சீனாவில் நடைபெறவிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X