For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாகர்கோவிலில் பிரம்மாண்டமாக தொடங்கிய ஆசிய சிலம்ப போட்டி… 250 வீரர்கள் பங்கேற்பு

Recommended Video

நாகர்கோவிலில் பிரம்மாண்டமாக தொடங்கிய ஆசிய சிலம்ப போட்டி

கன்னியாகுமரி:நாகர்கோவிலில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இந்தியா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 250 சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக சிலம்ப கழகம் சார்பில் நான்காவது ஏசியன் சிலம்பப் போட்டி இன்று துவங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து 250 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Asian silambam competition starts in nagercoil


சப் ஜூனியர்,சீனியர் என ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக சிலம்பம் போட்டி நடைபெற்றது. கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக சிலம்பம் மற்றும் வாள் பயிற்சியினை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படுகிறது. ஆண்கள் ஐந்து பிரிவு, பெண்கள் ஐந்து பிரிவு என தனித்தனியாக 14 குழுக்கள் அமைக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
Asian silambam competition starts in nagercoil


போட்டியில் பங்கேற்க பல்வேறு நாட்டைச் சேர்ந்த 30 நடுவர்கள் வந்துள்ளனர். வெற்றி பெறுபவர்கள் வரும் டிசம்பர் மாதம் மலேசியாவில் 3 நாட்கள் நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

எப்படி இருந்தாரு.. இப்ப இப்படி ஆயிட்டாரே.. ரசிகர்களை புலம்ப விட்ட சுரேஷ் ரெய்னா!! எப்படி இருந்தாரு.. இப்ப இப்படி ஆயிட்டாரே.. ரசிகர்களை புலம்ப விட்ட சுரேஷ் ரெய்னா!!

Story first published: Saturday, April 27, 2019, 16:07 [IST]
Other articles published on Apr 27, 2019
English summary
The 250 players from various countries, including India, Malaysia, Sri Lanka and Pakistan, participated in the Asian silambam competition in Nagercoil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X