அலை கடலென மெடல்கள்.. ஒரே ஒலிம்பிக்கில் புதிய "ரெக்கார்டு".. உலகை வியக்க வைத்த ஆஸி., வீராங்கனை

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்திருக்கிறார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் தொடர் ஏறக்குறைய கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது.

50மீ துப்பாக்கி சூடு.. இந்திய வீரர்கள் பிரதாப் சிங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் தோல்வி.. வெளியேற்றம்!50மீ துப்பாக்கி சூடு.. இந்திய வீரர்கள் பிரதாப் சிங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் தோல்வி.. வெளியேற்றம்!

ஜுலை 23ம் தேதி கோலாகலமாக தொடங்கிய இந்தத் தொடர், வரும் ஆகஸ்ட் 8ம் தேதியோடு நிறைவு பெறுகிறது.

பெண்களே காரணம்

பெண்களே காரணம்

இதில், இந்தியா சார்பில் இதுவரை 2 மெடல்கள் பெறப்பட்டுள்ளன. பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வெல்ல, பேட்மிண்டன் வீராங்கனை வெண்கலப்பதக்கம் வென்றுக் கொடுத்தார். அதேசமயம், குத்துச்சண்டையில் லோவ்லினா ஏற்கனவே வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ள நிலையில், அவர் அரையிறுதியிப் போட்டியில் வென்று வெள்ளி கைப்பற்ற காத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, பெண்கள் வட்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் இரண்டாம் இடம் பிடித்து, இன்று இறுதிப் போட்டியில் களமிறங்க காத்திருக்கிறார். இவற்றைத்தவிர இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, பெண்கள் ஹாக்கி அணி ஆகியவை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ள. இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில், இதுவரை இந்தியாவுக்காக பதக்கங்களை உறுதி செய்திருப்பது பெண்கள் மட்டுமே.

எம்மா மெக்கோன்

எம்மா மெக்கோன்

இப்படி இந்தியா ஒருபக்கம் தனது அடுத்தடுத்த மெடல்களுக்காக காத்திருக்க, பெண்களே இந்தியாவுக்கு மெடல்களை பெற்றுக் கொடுத்து பெயரை காப்பாற்றிக் கொண்டிருக்க, ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கோன் ஒற்றை ஆளாய் மெடல்களை அள்ளி வந்திருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது ஏழாவது பதக்கத்தை வென்றிருக்கிறார்.

7வது பதக்கம்

7வது பதக்கம்

ஆஸ்திரேலிய வீராங்கனையான எம்மா, இரண்டு முறை நடப்பு சாம்பியனான அமெரிக்காவை 4×100 மீட்டர் ரிலேவில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். கெய்லி மெக்கியோன், செல்சியா ஹாட்ஜஸ், எம்மா மெக்கோன், கேட் காம்ப்பெல் ஆகியோரின் குழு 3 நிமிடம் 51.60 நொடிகளில் இலக்கை அடைந்தது. அமெரிக்க அணி 3: 51.73 நொடியிலும், கனடா 3: 52.60 நொடியிலும் இலக்கை எட்டின. ஆஸ்திரேலிய அணி எட்டிய நேரம் ஒரு புது உலக சாதனையாகும். ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த எம்மா மெக்கோனுக்கு, டோக்கியோவில் இது ஏழாவது பதக்கமாகும்.

4 கோல்டு, 3 வெண்கலம்

4 கோல்டு, 3 வெண்கலம்

இதில் நான்கு தங்கப்பதக்கங்களும், 3 வெண்கலப்பதக்கங்களும் அடங்கும். இதன் மூலம், ஒரே ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வென்ற வீராங்கனை எனும் புதிய வரலாற்றுச் சாதனையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக, 1952ம் ஆண்டு East German-ன் கிறிஸ்டின் ஓட்டோ மற்றும் 2008ல் அமெக்காவின் நடாலி காக்லின் ஆகிய வீராங்கனைகள் ஒரே ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள் வென்றிருந்தனர். அந்த சாதனையை தற்போது எம்மா முறியடித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Emma McKeon First Female 7 Medals At Olympics - ஒலிம்பிக்ஸ்
Story first published: Monday, August 2, 2021, 14:31 [IST]
Other articles published on Aug 2, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X