For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'பயபுள்ளைக' பயப்பட மாட்டேங்குதுகளே.. இந்திய வீரர்களைப் பார்த்து ஆச்சரியப்படும் பிரெட் லீ!

மும்பை: இந்திய வீரர்கள் வேகப் பந்துவீச்சைப் பயப்பட்ட காலம் போய் விட்டது. இப்போதுள்ள இளம் வீரர்கள் மிகவும் துணிச்சலாக எதிர்கொண்டு ஆடுகின்றனர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய அதி வேக பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.

தற்போது இங்கலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்திய இளம் வீரர்கள் வேகப் பந்துகளை திறம்பட சமாளிப்பது அதைத்தான் காட்டுகிறது என்றும் லீ புகழாரம் சூட்டியுள்ளார்.

தற்போதுள்ள இந்திய அணி தன்னை வெகுவாக கவர்ந்திருப்பதாகவும் கூறியுள்ள லீ, அச்சமின்றி ஆடுகிறார்கள் இந்த வீரர்கள் என்றும் பாராட்டியுள்ளார்.

இளம் ரத்தம் அப்படித்தான் இருக்கும்

இளம் ரத்தம் அப்படித்தான் இருக்கும்

மும்பைக்கு வந்திருந்த லீ அங்கு பேசுகையில் இளம் வீரர்கள் அதிகம் இருக்கும்போதுதான் அணியும் சிறப்பாக ஜொலிக்கும். அது தற்போது இந்திய அணிக்கும் நடந்துள்ளது.

சிறப்பான வீரர்கள்

சிறப்பான வீரர்கள்

தற்போதைய இந்திய அணி சிறப்பாக உள்ளது. வீரர்கள் அச்சமின்றி ஆடுகின்றனர். இப்படிப்பட்ட அணி சிறிது காலத்திற்கு முன்பு வரை இல்லை.

டோன்ட் கேர்...

டோன்ட் கேர்...

எதைப் பற்றியும் கவலைப்படாமல் வருகிற பந்துகளை சரியாக கணித்து ஆடுகிறார்கள் இவர்கள். நான் சிறப்பாக ஆடுவேன் என்ற நூறு சதவீத அர்ப்பணிப்பு உணர்வுடன் இவர்கள் ஆடுகிறார்கள். சிறப்பாகவும் செய்கிறார்கள்.

சூப்பர் டீம் கிடைச்சிருச்சு

சூப்பர் டீம் கிடைச்சிருச்சு

இந்தியாவுக்கு சிறப்பான வீரர்களைக் கொண்ட அணி கிடைத்து விட்டதாகவே நான் கருதுகிறேன். இது பாராட்டுக்குரியது.

இஷாந்த் அபாரம்

இஷாந்த் அபாரம்

குறிப்பாக இந்திய பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். லார்ட்ஸ் மைதானத்தில் அவரது பந்து வீச்சு சிறப்பானதாக இருந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் 7 விக்கெட்கள் எடுப்பதென்றால் அது நிச்சயம் அபாரமான பந்து வீச்சு என்பதில் சந்தேகமில்லை.

நல்ல உயரம்.. நல்ல வேகம்

நல்ல உயரம்.. நல்ல வேகம்

நல்ல உயரத்துடன் இஷாந்த் சர்மா இருப்பது முக்கியானது. எனவேதான் அவர் மிகச் சிறப்பாக செயல்பட முடிந்துள்ளது. நல்ல வேகத்திலும் அவர் பந்து வீசுகிறார். பவுன்சரையும் அவர் சரியாக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார் என்றார் லீ.

அட சண்டை நடந்துச்சா.. தெரியலையே பாஸ்....

அட சண்டை நடந்துச்சா.. தெரியலையே பாஸ்....

சரி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜடேஜாவைத் திட்டினாரே அது பற்றி என்ன சொல்றீங்க என்று லீயிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ஸாரி, அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியலை. அதை நான் பார்க்கவும் இல்லை. மீடியாக்கள்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். எது நடந்திருந்தாலும், அதை அப்படியே விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்க போக வேண்டும் என்பதே எனது கருத்து. கிரிக்கெட் பற்றி மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும் என்றார் லீ.

Story first published: Monday, July 28, 2014, 13:31 [IST]
Other articles published on Jul 28, 2014
English summary
Former Australian speedster Brett Lee on Sunday (July 27) said he was impressed with the fearless attitude of the Indian youngsters in the ongoing Test series against England. "I have been really impressed with the new Indian side. They are playing fearless cricket and that happens only when you get new people into the team. It is not that they been in the team for a while and they are worried about not performing."
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X