For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலப்பு மெட்லே ரிலே.. பிரிட்டன் புதிய உலக சாதனை - "புதுசா ட்ரை பண்றோம்"-னு ஏமாந்த அமெரிக்கா

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கலப்பு 4x100m medley relay போட்டியில், பிரிட்டன் அணி புதிய சாதனை படைத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில், இன்று பல்வேறு நாடுகள் பதக்கங்களை குவித்து வருகின்றன. குறிப்பாக, சீனா.

தங்கப்பதக்கங்களை அதிகம் குவித்து, மீண்டும் சீனா புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுவிட்டது. தொடர்ந்து, ஒலிம்பிக்கில் 9வது நாளான இன்று, பல்வேறு பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஒலிம்பிக் 2020 வில்வித்தை.. காலிறுதியில் அதிர்ச்சி.. தென் கொரியாவின் சானிடம் வீழ்ந்த தீபிகா குமாரி ஒலிம்பிக் 2020 வில்வித்தை.. காலிறுதியில் அதிர்ச்சி.. தென் கொரியாவின் சானிடம் வீழ்ந்த தீபிகா குமாரி

 அணிகளே தீர்மானிக்கலாம்

அணிகளே தீர்மானிக்கலாம்

இதில், குறிப்பாக இன்று கலப்பு 4x100m medley relay போட்டி இன்று நடைபெற்றது. ஒலிம்பிக் தொடரில் முதன் முதலாக கலப்பு மெட்லே ரிலே ஆட்டங்கள் நடைபெறுவது இதுவே முதன்முறை. அதாவது, ஒரு நாட்டில் இருந்து இரு ஆண்களும், இரு பெண்களும் இந்த போட்டியில் பங்கேற்கலாம். இந்த நீச்சல் போட்டியில், எந்த வகையான ஸ்விம்மிங்கில் யார் நீந்த வேண்டும் என்பதை அந்தந்த அணிகளே தீர்மானித்துக் கொள்ளலாம்.

 பிரிட்டன் வெற்றி

பிரிட்டன் வெற்றி

இந்த போட்டியில், ஒவ்வொரு அணிகளும் freestyle பிரிவில் பெண்களை களமிறக்க, அமெரிக்க அணி மட்டும் வித்தியாச யுக்தியை கையாண்டது. அதாவது, தங்கள் வீரர் Caeleb Dressel-ஐ freestyle பிரிவில் களமிறக்கியது அமெரிக்கா. ஆனால் முயற்சி எடுபடவில்லை. இந்த போட்டியில், பிரிட்டன் 3 நிமிடங்கள் 37.58 வினாடிகளில் இலக்கை எட்டி உலக சாதனையுடன் தங்கத்தை வென்றது. சீனா 3: 38.86 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆஸ்திரேலியா 3: 38.95 வினாடிகளுடன் வெண்கலத்தை வென்றது.

 கட்டுப்பாடுகள் இல்லை

கட்டுப்பாடுகள் இல்லை

FINA அமைப்பானது, ரஷ்யாவின் கசானில் 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு mixed relays-ஐ சேர்த்தது, அங்கு 4x100 கலப்பு ஃப்ரீஸ்டைல் ரிலேவும் அறிமுகமானது. இதில், ஒரு ஆணோ பெண்ணோ எந்த stroke நீந்துவதற்கும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றாலும், mixed relayக்கு அணிகள் பின்பற்றும் சில பொதுவான உத்திகள் உள்ளன.

 பறிபோன பதக்கம்

பறிபோன பதக்கம்

பெரும்பாலான அணிகள் ஒரு வீராங்கனையை இறுதி ஃப்ரீஸ்டைல் லெக்கில் களமிறக்க பார்ப்பார்கள். ஏனென்றால் ஃப்ரீஸ்டைல் பிரிவில் மற்ற மூன்று பிரிவை விட பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான நேர வேறுபாடு பொதுவாக குறைவாக இருக்கும். அமெரிக்க இந்த இடத்தில் தான் சறுக்கியது. அவர்கள் Dressel-ஐ final legல் நீந்த வைத்தது தோல்விக்கான காரணமாக அமைந்தது. அவர்களால் ஐந்தாவது இடமே பிடிக்க முடிந்தது.

Story first published: Saturday, July 31, 2021, 17:13 [IST]
Other articles published on Jul 31, 2021
English summary
Britain mixed 4x100m medley relay gold record - ஒலிம்பிக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X