For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்பப்பப்பா.. இந்த குதிரைங்களுக்கு கொள்ளு போட்டு முடிக்கிறதுக்குள்ள.. அலுக்காமல் செய்யும் அமி

லண்டன்: மனிதர்களுக்கு கூட சாப்பாடு பெரிய பிரச்சினை கிடையாது. ஆனால் நாம் வளர்க்கும் விலங்குகளுக்கு சாப்பாடு போடுவது என்பது ரொம்பவே சவாலானது. ஆனால் அதை படு கேஷுவலாக கையாளுகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த அமி மர்பி.

ரேஸ் குதிரைகளுடன் நெருங்கிய தொடர்புடையவர் அமி. அதாவது ரேஸ் குதிரை பயிற்சியாளர் இவர். அப்படியானால் இவரது வேலை எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதுவும் இப்போது கொரோனா லாக்டவுன் வேறு. இதனால் குதிரைகளை வெளியிலும் கொண்டு போக முடியாத நிலை.

உலக அளவுல அஸ்வின்தான் மிகச்சிறந்த ஆப்-ஸ்பின்னர் -சொல்கிறார் ஹர்பஜன்உலக அளவுல அஸ்வின்தான் மிகச்சிறந்த ஆப்-ஸ்பின்னர் -சொல்கிறார் ஹர்பஜன்

இருப்பினும் இத்தனை சவால்களையும் சகித்துக் கொண்டு சூப்பராக ரேஸ் குதிரைகளை தனது அகாடமியில் பராமரித்து பலரின் சபாஷ்களைக் குவித்து வருகிறார் அமி மர்பி.

குதிரைக் கூட்டம்

குதிரைக் கூட்டம்

முன்பு போல இப்போது குதிரைகளை கூட்டம் கூட்டமாக வைத்திருக்க முடியாது. காரணம் கொரோனா பரவல் விலங்குகளிடமும் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர். எனவே குதிரைகளை பராமரிப்பதில் நிறைய சவால்கள் இருப்பதாக அமி கூறுகிறார். வழக்கமாக குதிரைகளை மேய்ச்சலுக்கு புல்வெளிகளில் மேய விடும்போது 10க்கும் மேற்பட்டவை இருக்கும். ஆனால் தற்போது அதை 4 குதிரைகளாக குறைத்து விட்டார்.

3 மீட்டர் இடைவெளி

3 மீட்டர் இடைவெளி

அதுவும் கூட நல்ல இடைவெளி விட்டுத்தான் குதிரைகளை மேய விடுகிறார். குதிரைக் கொட்டடியிலும் கூட குதிரைகளுக்கு இடையே குறைந்தது 3 மீட்டர் இடைவெளி இருக்கும்படி அவற்றை வைத்துள்ளார். மேலும் ஒரு குதிரைக்குப் பயன்படுத்தும் பொருளை மற்ற குதிரைக்குப் பயன்படுத்துவதில்லையாம். 27 வயதாகும் மர்பி இங்கிலாந்தில் உள்ள 550 லைசென்ஸ் பெற்ற பயிற்சியாளர்களில் ஒருவர்.

மர்பியும் 50 குதிரைகளும்

மர்பியும் 50 குதிரைகளும்

மர்பியிடம் 50 குதிரைகள் உள்ளன. இவற்றைக் கொண்டு அவர் ரேஸ் பயிற்சி கொடுத்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், குதிரைகளுக்கு நமது தேவை அதிகம் உள்ளது. அவைகளால் எதையம் தாங்களாக செய்ய முடியாது மட்டும் அல்ல, இந்த நேரத்தில் அவற்றின் ஆரோக்கியத்துக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. குறிப்பாக அவற்றின் ரொட்டீனை நாம் பின்பற்றியாக வேண்டும்.

தினசரி ரொட்டீன்

தினசரி ரொட்டீன்

முன்பு 10, 10 குதிரைகளாக ரொட்டீன் ரேஸ் வைப்போம். இப்போது அப்படி இல்லை. 4, 4 குதிரைகளைக செய்கிறோம். அதுவும் கூட நல்ல இடைவெளி விட்டுத்தான் செய்ய முடியும். மிகவும் கவனத்துடன் அவர்களின் ஆரோக்கியத்தை கவனித்து வருகிறோம். இது சோதனைக்காலம்தான். ஆனாலும் மிகச் சிறப்பாக அவை எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றன என்று கூறுகிறார் அமி.

Story first published: Tuesday, May 5, 2020, 16:29 [IST]
Other articles published on May 5, 2020
English summary
UK's race horse trainer Amy Murphy is taking care of her 50 horses with utmost care during this COVID 19 lock down
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X