For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே அறையில் 14 நாள்.. கல்யாணத்துக்கு முன்னாடியே டைவர்ஸ் ஆயிரும் போலயே.. காதலியின் கவலை

சிட்னி: இதை விட பெரிய தமாஷ் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. தனது காதலனைத் தேடி ஆஸ்திரேலியாவுக்கு வந்த இடத்தில் கொரோனா கண்காணிப்பில் சிக்கிக் கொண்டு விட்டார் இங்கிலாந்தைச் சேர்ந்த டிரையத்லான் வீராங்கனை நான் ஸ்டான்போர்டு. இப்போது அவரையும், அவரது காதலனையும் ஒரே அறையில் வைத்து 14 நாள் தனிமைப்படுத்தி விட்டனர் அதிகாரிகள்.

Recommended Video

BCCI giving their match videos to DD in lockdown time

இந்த சோகக் கதையை (ஒரே அறையில் இருந்தாலும் சோகமாதான் இருக்காம் அவங்களுக்கு), அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதை விட எங்களுக்கு கல்யாணம் ஆவதற்குள் அனேகமாக டைவர்ஸ் ஆகி விடும் என்று நினைக்கிறேன் என்றும் அவர் ஜாலியாக கலாய்த்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரையத்லான் வீரர் ஆரோன் ராயலின் காதலிதான் ஸ்டான்போர்ட். காதலனைக் காணவும், கூடவே பயிற்சி மேற்கொள்ளவும் சிட்னிக்கு வந்திருந்தார் ஸ்டான்போர்ட். வந்த நேரம் பார்த்து கொரோனா பரவல் சூடு பிடித்திருந்தது.

அவர் என்னடான்னா பரவட்டும்கிறார்.. இவர் என்னாடான்னா நடு ராத்திரியில் ஒர்க் அவுட் பண்றார்! அவர் என்னடான்னா பரவட்டும்கிறார்.. இவர் என்னாடான்னா நடு ராத்திரியில் ஒர்க் அவுட் பண்றார்!

ஸ்டான்போர்ட் - ராயல்

சிட்னி வந்து இறங்கிய ஸ்டான்போர்டுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் விமான நிலையத்தில் ஒருவரும் இல்லை. அவரை அப்படியே அவரது காதலனுடன் சேர்த்து ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டனர் அதிகாரிகள். அங்கு அவர்களுக்காக பிரத்யேகமான ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டது. அங்கேயே இருவரும் 14 நாட்கள் இருக்க வேண்டும். தீவிர கண்காணிப்பில் நீங்கள் வைக்கப்படுகிறீர்கள் என்று கூறி அடைத்து விட்டனர்.

14 நாட்கள் ஒரே அறையில்

ஆஹா.. இதென்னடா வம்பாப் போச்சு என்று இருவரும் அலுத்துக் கொண்டாலும் கூட இந்த குட்டி சிறைக்குள் வாழப் பழகிக் கொண்டு விட்டனர். கையோடு கூடவே கொண்டு வந்திருந்த கம்ப்யூட்டரில் விளையாடக் கூடிய ரைஸ் பைக்தான் இப்போது இவர்களுக்கு மிகப் பெரிய பொழுது போக்காக உள்ளதாம். மாறி மாறி ரேஸ் விளையாடி பொழுதைக் கழிக்கின்றனர்.

ரொம்ப கஷ்டம்தான்

இதுகுறித்து ஸ்டான்போர்டு கூறுகையில், கல்யாணம் நிச்சயமான அல்லது புதுசா கல்யாணமான ஜோடிக்குக் கூட இப்படி ஒரே அறையில் இத்தனை நாட்கள் சேர்ந்திருப்பது என்பது பெரிய சோதனைதான். எங்களுக்கு இது பெரிய சோதனை. நான் கூட சொன்னேன். நமக்கு கல்யாணமாவதற்குள் டைவர்ஸ் ஆகி விடும் போல என்று. ஆனால் இதுவரை எல்லாமே நல்லாதான் போய்ட்டிருக்கு என்று கூறிச் சிரிக்கிறார் ஸ்டான்போர்ட்.

14 நாள் அடஞ்சு கிடக்கணும்

ஆஸ்திரேலியாவுக்கு யாராவது வெளிநாட்டிலிருந்து வந்தால் அவர்களை ஹோட்டல்களில் இதுபோல 14 நாட்களுக்கு அடைத்து வைத்து விடுவார்கள். இதற்கான உத்தரவு மார்ச் 28ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனால்தான் ஸ்டான்போர்டு ஜோடியும் இப்படி ஹோட்டல் அறைக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நல்ல வேளையாக பொழுது போக்குவதற்குத் தேவையான ஐட்டங்களுடன் வந்ததால் ஸ்டான்போர்டு தப்பியுள்ளார்.

சினிமாவில் வருவது போல இருந்தது

சினிமாவில் வருவது போல இருந்தது

மேலும் அவர் கூறுகையில் விமான நிலையத்திற்கு வந்து இறங்கியபோது ஏதோ சினிமாப் படம் போல இருந்தது. அங்கு ஒருத்தர் கூட கிடையாது. மயான அமைதியாக இருந்தது. எனக்கு சிரிப்பதா அழுவதான்னு கூட தெரியலை. ஒரு வீரர் வந்து என்னை அப்படியே அழைத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றினார். இந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது என்றார் ஸ்டான்போர்ட்.

மாறி மாறி உடற்பயிற்சி

மாறி மாறி உடற்பயிற்சி

கூடவே நிறைய ஜிம் கருவிகளைக் கொண்டு வந்துள்ளதால் மாறி மாறி அதைப் பயன்படுத்தி பொழுதைக் கழிக்கின்றனராம். சின்ன இடத்தில் எப்படியெல்லாம் நம்மை சுவாரஸ்யமாக வைத்துக் கொள்ள முடியும் என்று பார்த்து பார்த்து செய்து பொழுதைக் கழிக்கிறோம். இதுவும் நல்லாதான் இருக்கு என்று சொல்கிறார் ராயல்.

நல்லா போகுது பொழுது

நல்லா போகுது பொழுது

ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் 4வது இடத்தைப் பிடித்தவர் ஸ்டான்போர்ட். தனது பிரிவில் 9வது இடத்தைப் பிடித்தவர். 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருவரும் பதக்க கனவுகளுடன் இருந்து வருகின்றனர். தற்போது நெட் பிளிக்ஸில் படங்கள் பார்ப்பது, உடற்பயிற்சி செய்வது, புக் படிப்பது, செல்பி வெளியிடுவது என இருவரும் பொழுதைப் போக்கி வருகின்றனர். வித்தியாசமான அனுபவம்தான்.. வெளியில் வந்ததும் புக் எழுதுங்க.

Story first published: Thursday, April 9, 2020, 23:25 [IST]
Other articles published on Apr 9, 2020
English summary
British Triathlete Non Stanford and Aaron Royle have shared their on life in Sydney hotel quarantine
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X