"தங்கத்தை ஷேர் பண்ணிக்கலாமா?".. உயர்ந்து நின்ற உயரம் தாண்டுதல் வீரர் முஸ்தபா.. நெகிழ வைத்த சம்பவம்!

டோக்கியோ: உயரம் தாண்டுதல் போட்டியில் நேற்று இரண்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு நாட்டு வீரர்களுக்கும் தங்க பதக்கம் அளிக்கப்பட்டது.

Tokyo 2020 Olympicsல் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் | Oneindia Tamil

ஒலிம்பிக் 2020 தொடரின் உயரம் தாண்டுதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இறுதி சுற்றில் கத்தாரின் முஸ்தபா ஈஸா பார்ஸிம், மற்றும் இத்தாலியின் கியான்மார்க்கோ டாம்பேரி இடையே கடும் போட்டி நிலவியது.

மீராபாய், சிந்து பதக்கம் வாங்கியும்.. பதக்க பட்டியலில் 61வது இடத்தில் இந்தியா.. முதலிடத்தில் சீனா! மீராபாய், சிந்து பதக்கம் வாங்கியும்.. பதக்க பட்டியலில் 61வது இடத்தில் இந்தியா.. முதலிடத்தில் சீனா!

இதில் இரண்டு வீரர்களும் 2.37 உயரம் தாண்டுதலை ஒரே புள்ளிகளோடு முடித்தனர். அதோடு இரண்டு பேருமே ஒருமுறைகூட தங்கள் முயற்சியில் தோல்வி அடையவில்லை.

வெற்றி

வெற்றி

அதேபோல் 2.39 மீட்டர் உயரத்தையும் எந்த தடங்கலும் இன்றி வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இரண்டு பேருமே இதில் மூன்று முறை தவறு செய்தனர். இதனால் இரண்டு பேருக்குமே ஒரே அளவில் புள்ளிகள் கொடுக்கப்பட்டது. அதன்பின் ஒலிம்பிக் அதிகாரி இவர்களுக்கு இடையில் டைபிரேக்கர் நடத்த முடிவு செய்தார்.

தீர்மானம்

தீர்மானம்

கடைசியாக ஒருமுறை இருவரையும் தாண்ட வைத்து வெற்றியாளரை தீர்மானிக்க முடிவு செய்தார்.ஆனால் ஒலிம்பிக் நடுவருக்கு முஸ்தபா மற்றும் கியான்மார்க்கோ இடையே இருக்கும் நட்பு பற்றி தெரியாது. இரண்டு பேருமே நீண்ட கால நண்பர்கள்.

உதவி

உதவி

அதோடு கியான்மார்க்கோவிற்கு காலில் காயம் ஏற்பட்ட போது அவருக்கு உறுதுணையாக இருந்து, அவர் மீண்டும் ஒலிம்பிக்கில் ஆடும் அளவிற்கு துணையாக இருந்தது முஸ்தபாதான். இரண்டு பேருமே வேறு வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்றாலும் உயரம் தாண்டுதல் என்ற ஒற்றை மேடையில் இரண்டு பேருமே நண்பர்கள் ஆனார்கள்.

காயம்

காயம்

முஸ்தபா உதவி இல்லை என்றால் என்னுடைய ஸ்போர்ட்ஸ் வாழ்க்கையே முடிவிற்கு வந்து இருக்கும் என்று கியான்மார்க்கோ கூட ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த அளவிற்கு இவர்கள் நெருக்கமான நண்பர்கள். இந்த நிலையில்தான் நேற்று உயரம் தாண்டுதலில் ஆட்டம் டிரா ஆன காரணத்தால் டை பிரேக்கர் நடுவதற்காக நடுவர் இரண்டு வீரர்களிடம் பேசி இருக்கிறார்.

முஸ்தபா

முஸ்தபா

நடுவர் விதிமுறைகளை சொல்லும்போது, அவரிடம் குறுக்கிட்ட முஸ்தபா.. நாங்கள் தங்கத்தை ஷேர் செய்து கொள்ளலாமா, எங்கள் இரண்டு பேருக்கும் தங்க பதக்கம் கொடுக்க விதியில் இடம் இருக்கிறதா என்று கேட்டார். இந்த கேள்வியை நடுவர் எதிர்பார்க்கவில்லை.. ஏன் கியான்மார்க்கோவும் இதை எதிர்பார்க்கவில்லை.

பதில்

பதில்

திடீரென பதில் அளித்த நடுவர்.. ஆம் இரண்டு பேருக்கும் தங்கம் கொடுக்க முடியும் என்று கூறிவிட்டு நடுவர் தலை அசைத்தார். இரண்டு பேருமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கத்தார், இத்தாலி ஆகிய இரண்டு நாடுகளுக்கும் தனி தனியாக தங்கம் கொடுக்கப்பட்டது.

தங்கம்

தங்கம்

நண்பர்கள் கியான்மார்க்கோ முஸ்தபா இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி உற்சாக மிகுதியில் துள்ளிக்குதித்தனர். இரண்டு நாட்டு நிர்வாகிகளும் கோஷம் எழுப்பி இரண்டு வீரர்களையும் பாராட்டினார்கள். ஒலிம்பிக்கில் பொதுவாக வீரர்களுக்கு இடையே நட்பு, இணக்கம் இருந்தாலும் கூட இது போன்ற சம்பவங்கள் நடப்பது அரிது.

நண்பர் தினம்

நண்பர் தினம்

நேற்று சரியாக நண்பர்கள் தினத்தின் போது இரண்டு நண்பர்கள் தங்கள் விருதை, அதிலும் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டது உலகம் முழுக்க இருக்கும் ஸ்போர்ட்ஸ் ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கொண்டாடிய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Can we share the 2 golds? Qatar’s Barshim shares gold medal with Italy’s Tamberi share in high jump: Video goes viral.
Story first published: Monday, August 2, 2021, 10:14 [IST]
Other articles published on Aug 2, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X