தங்கப்பதக்கம்
நீளம் தாண்டும் போட்டியிலும் அவர் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். தபிதா 5.86 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். சீனாவின் ஹுவா ஷிஹு வெள்ளியும், இந்திய வீராங்கனை அம்பிகா நர்ஸாரி வெண்கலமும் வென்றனர்.
அரசு பள்ளி மாணவி
2 தங்கம் வென்று சாதனை படைத்துள்ள தபிதா, செயின்ட் ஜோசப் விளையாட்டு அகடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் மாணவியாவார்.
ஆட்டோ ஓட்டுநர்
தந்தை மகேஷ்வரன் ஆட்டோ ஓட்டுநர். தினமும் பயிற்சிக்கு அழைத்து செல்லும் தாய் மேரி கோகிலா இல்லத்தரசி. இவருடன் பிறந்தவர்கள் 2 அக்கா, ஒரு தம்பி.
பயிற்சி முகாம்
இந்த வெற்றி குறித்து தபிதாவின் பயிற்சியாளர் நாகராஜன் கூறியதாவது: தபிதாஆறாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பயிற்சி முகாமில் சேர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளாக ஆர்வமாகவும், தீவிரமாகவும் பயிற்சி பெற்று வருகிறார்.
நம்பிக்கை நட்சத்திரம்
இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி உள்ளார் என்றார். மொத்தம் 12 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியா இதுவரை 7 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது.