செஸ் ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்தியா - ரஷ்யா வெற்றி.. கூடவே வெடித்த சர்ச்சை!

டெல்லி : சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்திய செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ரஷ்யா கூட்டாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய வீரர்களுக்கு இணைய இணைப்பு சரியாக கிடைக்காததால் போட்டியில் முழுமையாக பங்கேற்க முடியவில்லை.

அதன் படி, இந்தியா தோல்வி அடைந்ததாகவே கருதப்பட்டது. எனினும், தங்கள் வீரர்களின் நிலையை விளக்கியது இந்தியா. இதை அடுத்து இந்தியா - ரஷ்யா இரண்டு அணிகளும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் இந்த தொடரில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர்களை எதிர்த்து இந்திய வீரர்கள் ஆடினர்.

அப்போது இரண்டு இந்திய வீரர்களுக்கு இணைய இணைப்பு சரியாக கிடைக்காததால் போட்டி நேரம் முடிந்தது. அவர்களில் ஒருவர் வெற்றி பெறும் நிலையில் இருந்தார். இதையடுத்தே இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாக வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விருதை வாங்கறது என்னோட கனவு... பொறுப்புகளை இந்த விருது அதிகப்படுத்தியிருக்கு

முன்னதாக நடந்த காலிறுதி சுற்றில் அர்மேனியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்ற போது, அர்மேனியா தங்களுக்கு சரியாக இணைய இணைப்பு கிடைக்கவில்லை என புகார் கூறி இருந்தது. ஆனால், அப்போது இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், இறுதிப் போட்டி முடிவு குறித்து சர்ச்சை எழ வாய்ப்புள்ளது.

இந்தியாவின் இந்த வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார். ரஷ்ய அணியையும் தான் வாழ்த்துவதாக கூறி உள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Chess Olympiad : India, Russia announced as Joint winners after India reports server crash. This decision may cause controversy as Armeia denied advantage for the same reason in Quarter final.
Story first published: Sunday, August 30, 2020, 23:36 [IST]
Other articles published on Aug 30, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X