For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பதக்கம் தான் முக்கியம்.. வளைகாப்பு நிகழ்ச்சி நிறுத்தம்.. செஸ் ஒலிம்பியாட்டில் நெகிழ்ச்சி

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி கடந்த 11 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று, கடந்த திங்கட்கிழமை முடிவடைந்தது.

இதில் உலகம் முழுவதுமிலிருந்து 185 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் ஓபன் பிரிவில் இந்திய பி அணியும், மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியும் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

Chess Olympiad – Grandmaster Harika Postponed her baby showering function

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த ஹரிகாஅனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். செஸ் போட்டியில் ஒரே இடத்தில் அமர்ந்து கவனத்துடன் விளையாட வேண்டும். ஆனால் ஹரிகா கர்ப்பிணி என்பதால், அவருக்கு என பிரத்யேக இருக்கையை தமிழக அரசு ஏறபாடு செய்து இருந்தது.

இந்த நிலையில், இந்திய பி அணியில் இடம்பெற்றிருந்த ஹரிகா வெண்கலம் வென்றார். இது குறித்து பேசிய ஹரிகா, தனக்கு 9வது மாதம் என்பதால், வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டு இருந்ததாகவும், ஆனால் இந்தியாவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக அனைத்தையும் தள்ளிவைத்துவிட்டு பங்கேற்றேன் என்று கூறினார்.

தற்போது பதக்கம் வாங்க வேண்டும் என்ற கனவு நிஜமாகிவிட்டதாக ஹரிகா கூறியுள்ளார். கர்ப்பிணி பெண்ணாக இருந்தாலும் நாட்டுக்காக சாதிக்க வேண்டம் என்பதற்காக, ஹரிகா எடுத்த முயற்சி அனைவருக்கும் ஒரு ஊக்கத்தை கொடுத்துள்ளது.

Recommended Video

செஸ் ஒலிம்பியாட்டில் இத்தனை உணவுகளா ? சொந்த ஊருக்கு பார்சல் கட்டிய வீரர்கள்

“ஒருமுறை கூட நோ சொல்லல” செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்“ஒருமுறை கூட நோ சொல்லல” செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்

Story first published: Thursday, August 11, 2022, 19:50 [IST]
Other articles published on Aug 11, 2022
English summary
Chess Olympiad – Grandmaster Harika Postponed her baby showering function பதக்கம் தான் முக்கியம்.. வளைகாப்பு நிகழ்ச்சி நிறுத்தம்.. செஸ் ஒலிம்பியாட்டில் நெகிழ்ச்சி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X