For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

13 வருடங்களுக்கு பிறகு.. ஒலிம்பிக்கில் புது "ரெக்கார்டு".. அமெரிக்காவுக்கே "ஆப்பு" வைத்த சீனா

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் நீச்சல் போட்டியில், சீனா புது சாதனை படைத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் படு சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றன. ஜப்பான், அமெரிக்கா, சீனா இடையே, யார் அதிகம் கோல்டு வெல்கிறார்கள் என்ற போட்டி நிலவினாலும், மற்ற நாடுகளும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன.

ஒலிம்பிக் கோல்ஃப் பிரிவில்.. இந்தியாவுக்காக கடைசி நிமிடத்தில் பற்றும் ஒலிம்பிக் கோல்ஃப் பிரிவில்.. இந்தியாவுக்காக கடைசி நிமிடத்தில் பற்றும்

இந்தியாவைப் பொறுத்தவரை இன்னமும் மீராபாய் சானு வென்ற வெள்ளிப்பதக்கம் மட்டுமே கையில் உள்ளது. எனினும், அடுத்தடுத்து நாட்களில் இந்தியா வசம் பதக்கங்கள் அணிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்.

மெடல் வாய்ப்பு

மெடல் வாய்ப்பு

இன்று நடந்த ஹாக்கி, பேட்மிண்டன், வில்வித்தை என்று மொத்தம் 4 போட்டிகளிலும் இந்தியா வெற்றிவாகை சூடியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்றைய தினம் தான் இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைத்துள்ளது. ஆகையால், அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் இந்தியா 2, 3 பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பேட்மிண்டன், வில்வித்தை போன்றவற்றில் இந்தியாவுக்கு மெடல் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

4x200m freestyle நீச்சல்

4x200m freestyle நீச்சல்

இது ஒருபுறம் இருக்க, சீனா இன்று ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறது. ஆம்! இன்று பெண்கள் 4x200m freestyle நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில், சீன அணி 7 நிமிடம் 40.33 நொடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. ஒலிம்பிக்கில், பெண்கள் 4x200m freestyle இந்த நம்பர் ஒரு புதிய சாதனையாகும்.

Li Bingjie

Li Bingjie

தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அணி 7:40.73 நொடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது. ஆஸ்திரேலிய அணி 7:41.29 நொடிகளில் இலக்கை எட்டி வெண்கலப்பதக்கத்தை வென்றது. சீன அணி வெற்றிப் பெற்றதில், Li Bingjie எனும் வீராங்கனை முக்கிய பங்காற்றினார். அவரது அசாத்திய நீச்சல் திறமையால் தான் சீனா தங்கம் வெல்ல முடிந்தது.

14 கோல்டு

14 கோல்டு

2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்குப் பிறகு சீனா முதல் தடவையாக இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. அதேசமயம், அமெரிக்க பெண்கள் அணி 4x200 மீ நீச்சல் பிரிவில் அமெரிக்கா தங்கத்தை இழந்திருக்கிறது. சீனா 14 தங்கப்பதக்கத்துடன் முதல் இடத்திலும், அமெரிக்கா மற்றும் ஜப்பான் 13 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

Story first published: Thursday, July 29, 2021, 18:53 [IST]
Other articles published on Jul 29, 2021
English summary
China stun US and Australia 4x200m swimming - ஒலிம்பிக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X