For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், இந்தியா இதுவரை வென்றுள்ள பதக்கம் ஒன்றே ஒன்று தான். பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு வென்ற வெள்ளிப்பதக்கம் தான் இந்தியா வசம் உள்ளது.

அடுத்த மெடலை கைப்பற்ற இந்தியா கடுமையாக போராடி வருகிறது. ஆனால், இதுவரை எதுவும் க்ளிக் ஆகவில்லை.

குறிப்பாக, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சொதப்பியது. நிச்சயம் 2 மெடலாவது துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

 சீனா தங்கம்

சீனா தங்கம்

இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான டைவிங் போட்டியில் சின்க்ரனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவு இறுதி சுற்றில் 8 அணிகள் கலந்து கொண்டன. இரண்டு பேர் இணைந்து பங்கெடுத்த இந்த போட்டியில் மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்றன. இதில் சீன ஜோடி 363.78 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

 மெக்சிகோ வெண்கலம்

மெக்சிகோ வெண்கலம்

310.80 புள்ளிகள் பெற்று அமெரிக்கா இரண்டாவது இடத்தை பிடித்தது. அதாவது வெள்ளி வென்றது. 299.70 புள்ளிகள் பெற்று மெக்சிகோ மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றது. போட்டி தொடங்கிய நாள் முதல் இன்று வரை அமெரிக்காவும் - சீனாவும் தான் ஒலிம்பிக்கில் மல்லுக்கட்டி வருகின்றன.

 சீனா இரண்டாமிடம்

சீனா இரண்டாமிடம்

இன்று (ஜுலை) மாலை 6 மணி நிலவரப்படி அமெரிக்கா தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 8 என மொத்தம் 22 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 7 என மொத்தம் 21 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. ஜப்பான் தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 3 என மொத்தம் 17 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 5 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது.

 தொடங்கிய விசாரணை

தொடங்கிய விசாரணை

வெறும் 70,000 மக்கள் தொகை கூட இல்லாத பெர்முடா நாடு கூட இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றுவிட்டது. ஆனால், இந்தியா இன்னமும் 2வது பதக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, துப்பாக்கிச் சுடுதல் அணி பெரியளவில் ஏமாற்றிவிட்டதால், தோல்விக்கான காரணங்களை ஆராயும் முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக National Rifle Association of India (NRAI) அறிவித்துள்ளது.

Story first published: Tuesday, July 27, 2021, 21:53 [IST]
Other articles published on Jul 27, 2021
English summary
China wins gold women’s 10 metres synchronised - ஒலிம்பிக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X