For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங் சூயி எங்கே? எம்.ஜி.ஆர். காலத்து டெக்னிக்கை கையில் எடுக்கிறதா சீனா

பீய்ஜிங்; சீன முன்னாள் துணை அதிபர் சாங் கயோலி மீது Me too புகார் ஒன்றை சீனாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை பெங் சூயி கூறியிருந்தார்.

புகார் கூறிய சில மணி நேரத்திலேயே பெங் சூயி மாயமான தகவல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் பெங் சூயி அளித்த புகார் தொடர்பான அனைத்து தகவல்களையும் இணையத்தளத்திலிருந்து சீனா நீக்கியது.

இது தொடர்பாக தங்களது கவலையை வெளிப்படுத்திய சர்வதேச டென்னிஸ் சம்மேளனம், பெங் சூயியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது

பெங் சூயி எங்கே?

பெங் சூயி எங்கே?

டென்னிஸ் வீராங்கனை மாயமானது குறித்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். பெங் சூயி எங்கே என்ற ஹேஸ் டேக் மூலம் அவர்கள் தங்களது கவலையை தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பல, பெங் சூயி குறித்து அழுத்தம் கொடுத்தன. நேற்று வெள்ளை மாளிகையிலும் பெங் சூயி குறித்து அமெரிக்கா தங்களது கவலையை வெளிப்படுத்தியது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

பெங் சூயி குறித்து தகவலை சீனா வெளியிடவில்லை என்றால் சர்வதேச விளையாட்டு போட்டிகள் இனி சீனாவில் நடைபெறாது என்றும், ஒலிம்பிக் போட்டியில் சீனா பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் சீனா முதல் முறையாக இந்த விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ளது.

புதிய வீடியோ

புதிய வீடியோ

பெங் சூயி தனது நண்பர்கள், பயிற்சியாளர்களுடன் உணவக விடுதியில் சாப்பிடுவது போன்ற வீடியோவை சீன அரசின் ஊடகம் வெளியிட்டுள்ளது. மேலும் மற்றொரு வீடியோவில் பெங் சூயி, ஜூனியர் டென்னிஸ் போட்டி தொடரில் விருந்தினராக பங்கேற்றது போல் காட்சிகள் இருந்தன.

சர்ச்சை

சர்ச்சை

எனினும் இந்த வீடியோவின் உண்மை தன்மை தெரியவில்லை.இது தற்போது எடுக்கப்பட்ட புதிய வீடியோவா இல்லை பழைய வீடியோவா என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்று மகளிர் டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது பெங் சூயியின் வீடியோ ஆதாரம் மட்டும் போதாது என்றும் தாங்கள் அவரிடம் பேசினால் தான் நம்புவோம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

பிணை கைதி

பிணை கைதி

பெங் சூயி சீன அரசால் பிணை கைதியாக வீட்டில் அடைக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உலக நாடுகளின் அழுத்தத்தின் காரணமாகவும், அவர்களது வாயை அடைக்கவும் சீனா பெங் சூயி வைத்து வீடியோ ஒன்றை தயாரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவில் காலம் காலமாக காட்டப்படும் காட்சி என்பதால் , சீனா உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.

Story first published: Sunday, November 21, 2021, 13:31 [IST]
Other articles published on Nov 21, 2021
English summary
Chinese Tennis star Peng shuai Video surfaces after Global outcry. International countries shared their concerns about Peng shuai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X