For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டொம்மென்று விழுந்த துருப்பிடிச்ச லைட் போஸ்ட்.. தப்பினார் ரொனால்டின்ஹோ.. கேரளாவில் பரபரப்பு

கோழிக்கோடு: கேரளாவுக்கு வந்திருந்த பிரேசில் கால்பந்து சூப்பர்ஸ்டார் ரொனால்டின்ஹோவுக்கு மறக்க முடியாத நாளாக இன்றைய நாள் அமைந்தது. துருப்பிடித்துப் போன விளக்குக் கம்பம் தடாரென்று கீழே விழவே அதிர்ஷ்டவசமாக ரொனால்டின்ஹோ தப்பினார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரான ரொனால்டின்ஹோ, முன்னாள் பிரேசில் அணி வீரர் ஆவார். உலகக் கோப்பைப் போட்டிகளில் பிரேசில் அணிக்கு உயர்வுகளைக் கொடுத்தவர். பிற பிரேசில் ஸ்டார்களான ரொமாரியோ, ரொனால்டோ போன்று பிரபலமானவர் இவரும்.

இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு வந்திருந்தார் ரொனால்டின்ஹோ. அப்போது விளக்குக் கம்பம் கீழே விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அவர்.

அரசுப் பள்ளிக்கு விசிட்

அரசுப் பள்ளிக்கு விசிட்

இன்று காலை கோழிக்கோட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு வந்திருந்தார் ரொனால்டின்ஹோ. அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பள்ளியிலி்ருந்து அவரது கார் வெளியே வந்து கொண்டிருந்தது.

காருக்கு முன்பு விழுந்த விளக்குக் கம்பம்

காருக்கு முன்பு விழுந்த விளக்குக் கம்பம்

அப்போது தெருவோரமாக இருந்த டிராபிக் விளக்குக் கம்பம் தடாரென்று கார் முன்பாக சாய்ந்து விழுந்தது. துருப்பிடித்த நிலையில் அது இருந்துள்ளது. இத்துப் போய் விட்டதால் கீழே விழுந்து விட்டது.

நல்லவேளையாப் போச்சு

நல்லவேளையாப் போச்சு

இதனால் சற்று தி்டுக்கிட்டார் ரொனால்டின்ஹோ. பின்னர் புன்னகைத்து தன்னை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். அதன் பிறகு கார் வேகமாக புறப்பட்டுச் சென்று விட்டது.

நேற்று முதல் கேரளாவில் விஜயம்

நேற்று முதல் கேரளாவில் விஜயம்

நேற்று முதல் கேரளாவில் விஜயம் செய்து வருகிறார் ரொனால்டின்ஹோ. 35 வயதான அவரது வருகையால் கேரள மாநில கால்பந்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவருக்கு நேற்று இரவு கோழிக்கோட்டில் பிரமாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டது.

வெட்கப்படுறாப்ல பாஸ்!

வெட்கப்படுறாப்ல பாஸ்!

ஆனால் ரொனால்டின்ஹோ சரியாக பேசவில்லையாம். எதற்கெடுத்தாலும் புன்னகைதான். ரொம்ப ஷை டைப்பாக இருக்கிறார். மொழிப் பிரச்சினை வேறு. இருந்தாலும் ரசிகர்களின் அன்பைப் பார்த்து அவர் நெகிழ்ந்து விட்டாராம்.

33 கோலடித்தவர்

33 கோலடித்தவர்

பிரேசில் அணிக்காக 97 போட்டிகளில் ஆடியுள்ளார் ரொனால்டின்ஹோ. 33 கோல்கள் போட்டுள்ளார். மேலும் பல்வேறு முக்கிய சர்வதேச அணிகளுக்காகவும் ஆடியவர்.

Story first published: Monday, January 25, 2016, 16:33 [IST]
Other articles published on Jan 25, 2016
English summary
An old rusted traffic light post came crashing down, just missing the vehicle carrying former Brazilian football superstar Ronaldinho on Monday morning (January 25) near here. CPI-M legislator A. Pradeep Kumar told IANS that after completing his morning engagement when Ronaldinho came to visit a state-run school, his car was coming out from the school.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X