For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் கலக்கவிருக்கும் தமிழர்கள்..கோடிகளில் பரிசுத்தொகை.. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு

சென்னை: ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ளும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் 2020, இந்தாண்டு ஜூன் 23ஆம் தேதி முதல் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

இரண்டே நாள் இடைவெளி தான்.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் விருந்து.. டி20 உலகக்கோப்பை தேதி வெளியானதுஇரண்டே நாள் இடைவெளி தான்.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் விருந்து.. டி20 உலகக்கோப்பை தேதி வெளியானது

ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கு பெறவிருக்கும் இந்திய வீரர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள்

ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள்

அந்தவகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்வதற்காக தமிழகத்தை சேர்ந்த 6 பேர் தகுதிப்பெற்றுள்ளனர். அதில் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை தமிழகத்தை பவானி தேவியும் ஒருவர். இவரை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்தவாரம் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதற்கு பவானி தேவியும் வீடியோ வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்.

ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை

ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை

இந்நிலையில் மீதமுள்ள 5 பேருக்கும் ஊக்க தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடங்கி வைத்த அவர், பின்னர் இந்த காசோலையை வழங்கினார்.

பரிசுத்தொகை அறிவிப்பு

பரிசுத்தொகை அறிவிப்பு

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழர்கள் 6 பேரில் தங்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்வபவர்களுக்கு ரூ.2 கோடியும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தலைமுறைக்கே ஊக்கம்

தலைமுறைக்கே ஊக்கம்

தொடர்ந்து பேசிய அவர், விளையாட்டு வீரர்கள் ஒரு தலைமுறைக்கே ஊக்கம் தருபவர்கள். விளையாட்டு துறையை விளையாட்டாக எடுத்துக் கொண்டால் அது விளையாட்டாய் போய்விடும். எனவே தமிழகத்தை நான்கு பகுதிகளாக பிரித்து ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று திமுக கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனத்தெரிவித்தார்.

Story first published: Sunday, June 27, 2021, 17:06 [IST]
Other articles published on Jun 27, 2021
English summary
CM Stalin annouced that the TN Players will get Rs.3 Crore Prize money, if they Won the gold medal in Tokyo olympics
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X