For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலை நிகழ்ச்சிகளுடன் இன்று நிறைவடைகிறது காமன்வெல்த் போட்டி: பதக்க பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா

By Veera Kumar

கிளாஸ்கோ: நடப்பு காமன்வெல்த் போட்டிதிருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் கடந்த 23ம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக தொடங்கியது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்க வேட்டையில் ஈடுபட்டனர்.

கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

இந்நிலையில் காமன்வெல்த் போட்டி இன்று நிறைவடைகிறது. நிறைவு விழா இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்குகிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஹம்ப்டன் ஸ்டேடியத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி காண்பிக்க உள்ளனர். ஆஸ்திரேலியாவின் பிரபல பாடகி 46 வயதான கைலி மினோக்கும் ரசிகர்களை கவர உள்ளார்.

இன்றைய போட்டிகள்

இன்றைய போட்டிகள்

இன்றும் சில போட்டிகள் நடக்க உள்ளன. பேட்மிண்டனில் 5 தங்கப்பதக்கத்திற்கும், சைக்கிள் பந்தயத்தில் 2 தங்கப்பதத்திற்கும், ஹாக்கியில் தங்கப்பதக்கத்திற்கும், நெட்பாலில் தங்கப்பதக்கத்திற்கும், ஸ்குவாஷ் போட்டியில் 2 தங்கப்பதக்கத்திற்கும் இறுதி சுற்றுகள் நடக்கின்றன.

இது தவிர 3 வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டங்களும் நடக்கின்றன.

இங்கிலாந்து முதலிடம்

இங்கிலாந்து முதலிடம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 14 தங்கம் உட்பட 61 பதக்கங்களுடன் பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது. பதக்கப்பட்டியலில் 56 தங்கம், 55 வெள்ளி, 54 வெண்கலம் என 165 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து 45 தங்கம், 42 வெள்ளி, 45 வெண்கலம் என 132 பதக்கங்களை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலியா பதக்கப் பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது.

கனடா, ஸ்காட்லாந்து

கனடா, ஸ்காட்லாந்து

கனடா வீரர்கள் 31 தங்கம் உட்பட 81 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளனர். போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்து 19 தங்கப் பதக்கங்களுடன் 52 பதக்கங்களை கைப்பற்றி 4வது இடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு 5வது இடம்

இந்தியாவுக்கு 5வது இடம்

14 தங்கம், 28 வெள்ளி, 19 வெண்கலம் என 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் நீடிக்கிறது. 10வது நாளான நேற்று இந்திய அணி ஒரு தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களை கைப்பற்றியது.

Story first published: Sunday, August 3, 2014, 12:12 [IST]
Other articles published on Aug 3, 2014
English summary
The end of the Commonwealth Games is almost upon us and organisers are promising a “Glasgow-style” party to remember on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X