For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வண்ணமயமாக நிறைவடைந்தது 20வதுகாமன்வெல்த் போட்டி: ஐந்தாவது இடத்துடன் இந்தியா திருப்தி

By Veera Kumar

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தில் நடந்த 20வது காமன்வெல்த் போட்டி வண்ணமயமான நிறைவு விழாவுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23ம் தேதி 20வது காமன்வெல்த் போட்டிகள் துவங்கியது. இங்கிலாந்திடன் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றன. சுமார் 11 நாட்கள் நடந்த இப்போட்டிகளின் முடிவில், 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலம் என மொத்தமாக 174 பதக்கங்களை குவித்த இங்கிலாந்து பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

ஆஸ்திரேலியா 2வது இடம்

ஆஸ்திரேலியா 2வது இடம்

ஆஸ்திரேலியா மொத்தம் 137 பதக்கங்களை வென்று இடண்டாவது இடத்தை பிடித்தது. இதில், 49 தங்கம், 42 வெள்ளி, 46 வெண்கலம் அடங்கும்.

கனடா 32 தங்கம், 16 வெள்ளி, 34 வெண்கல பதங்கங்களுடன் மொத்தம் 82 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தையும் பெற்றது.

வண்ணமய நிகழ்ச்சிகள்

வண்ணமய நிகழ்ச்சிகள்

இதுவரை ஸ்காட்லாந்தில் நடக்கதாக அளவிற்கு சிறப்பாக கடந்த 11 நாட்கள் நடந்த இப்போட்டிகளின் நிறைவு விழா, நேற்று ஹாம்டன் பார்க் மைதானத்தில் மிகவும் வண்ணமயமாக நடந்தது. சுமார் 40,000 ரசிகர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் 15,000 தன்ஆர்வலர்கள், 1,500 பணியாளர்கள், 30,000 ஒப்பந்ததாரர்கள், 1,800 காவலர்கள் என அனைவரும் மைதானத்தில் வரிசையாக நுழைந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவிடம் கொடி

ஆஸ்திரேலியாவிடம் கொடி

இப்போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. வரும் 2018ல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடத்தப்படுவதை தெரிவிக்கும் விதத்தில் காமன்வெல்த் போட்டியில் பயன்படுத்தப்பட்ட கொடி ஒப்படைக்கப்பட்டது.

பாடகி மினோக் இசை நிகழ்ச்சி

பாடகி மினோக் இசை நிகழ்ச்சி

இதைதொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பாப் பாடகி மினோக்கின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இறுதியாக ஸ்காட்லாந்து பாப்பாடகி லுாலுா அந்நாட்டின் 'சூட்' பாடலை பாட ரசிகர்கள், பணியாளர்கள், வீரர், வீராங்கனை என அனைரும் மைதானத்தில் நடனமாட மைதானத்தின் வெளியே வண்ணமயமாக வாணவேடிக்கையுடன் விழா கோலாகலமாக முடிவடைந்தது.

இந்தியாவுக்கு ஐந்தாவது இடம்

இந்தியாவுக்கு ஐந்தாவது இடம்

காமன்வெல்த்தில் இந்தியா 64 பதக்கங்களை வென்று 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில், 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம். இந்தியாவில் இருந்து மொத்தம் 215 வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை 2வது இடம்

கடந்த முறை 2வது இடம்

டெல்லியில் 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை வாரி குவித்து முதல் முறையாக 2வது இடத்தை பெற்றது.

சாதகமான விளையாட்டுகள் நீக்கம்

சாதகமான விளையாட்டுகள் நீக்கம்

டெல்லி காமன்வெல்த்தின்போது போட்டியை நடத்திய நாடு என்ற வகையில், இந்தியா தனக்கு சாதகமான வில்வித்தை, டென்னிஸ் போன்ற போட்டிகளை சேர்த்திருந்தது. ஆனால் இந்த முறை அவ்விரு விளையாட்டுகளும் கழற்றி விடப்பட்டன. இது தவிர, மல்யுத்தத்தில் கிரகோ-ரோமன் பிரிவு, துப்பாக்கி சுடுதலில் பல பிரிவுகள் நீக்கப்பட்டன. இந்தியாவின் பதக்க எண்ணிக்கை வெகுவாக குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

Story first published: Monday, August 4, 2014, 9:42 [IST]
Other articles published on Aug 4, 2014
English summary
The curtain fell on the 2014 Commonwealth Games in Glasgow on Sunday with the closing ceremony in Hampden Park. Australian pop star Kylie Minogue headlined the ceremony, which also had performances from Scottish artists Lulu, Deacon Blue, Dougie MacLean and others.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X