For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நேரத்தில் இந்த உதவி தான் தேவை.. வேலையில்லாதவர்கள் வயிற்றில் பாலை வார்த்த அம்பயர்!

கராச்சி : பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அம்பயர் அலீம் தார் ஏழைகள் மற்றும் வேலை இல்லாதவர்களுக்கு இலவச உணவு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Recommended Video

Aleem Dar announced free food for poor and unemployed

கொரோனா வைரஸ் காரணமாக பலர் வேலை இழந்து உள்ள நிலையில், இந்த முக்கிய உதவியை அவர் அறிவித்துள்ளார்.

அவரது இந்த உதவி பலரையும் வேலை இல்லாதவர்களுக்கு உதவி செய்ய தூண்டுவதாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைரஸ் தாக்கம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை உண்டாக்கி உள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கி பலியாகி உள்ளனர்.

பொருளாதார சிதைவு

பொருளாதார சிதைவு

நேரடி உயிரிழப்பு ஒருபுறம் என்றால், உலகப் பொருளாதாரத்தை சிதைத்து, சின்னாபின்னம் ஆக்கி உள்ளது கொரோனா வைரஸ். இந்த ஒரு மனிதரிடம் இருந்து, மற்றவரிடம் பரவும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அஞ்சும் நிலை உருவாகி உள்ளது.

வெளியே செல்லக் கூடாது

வெளியே செல்லக் கூடாது

பல நாடுகள் மக்களை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி வந்தால் கைது அல்லது லத்தி அடி வாங்கும் நிலை உள்ளது. இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு நிலை அமலில் உள்ளது.

பாகிஸ்தான் நிலை

பாகிஸ்தான் நிலை

அதே போல, பாகிஸ்தான் மண்ணிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கேயும் பதற்றம் காணப்படுகிறது. இதுவரை 1200க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல தொழில்கள் முடங்கி, பலர் வேலை இல்லாமல் உள்ளனர்.

இலவச உணவு

இலவச உணவு

இந்த நிலையில், பாகிஸ்தான் அம்பயர் அலீம் தார் தன் "தார் டிலைட்டோ" எனும் ரெஸ்டாரண்டில் ஏழைகள் மற்றும் வேலை இல்லாதவர்களுக்கு இலவச உணவு அளிக்க முன் வந்துள்ளார். இது குறித்து ஒரு வீடியோவில் அவர் அறிவித்துள்ளார்.

என்ன சொன்னார் அலீம் தார்?

என்ன சொன்னார் அலீம் தார்?

"கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. அதன் பாதிப்பை பாகிஸ்தான் நாட்டிலும் காண முடிகிறது. மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு பாதுகாப்பை வலியுறுத்தி சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளன" என வீடியோவில் கூறினார் அலீம் தார்.

இலவச உணவை பெற்றுக் கொள்ளலாம்

இலவச உணவை பெற்றுக் கொள்ளலாம்

"இந்த லாக்டவுனில் மக்கள் பலர் வேலையை இழந்துள்ளனர். நான் தார் டிலைட்டோ எனும் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறேன். வேலை இல்லாத மக்கள் அங்கே வந்து இலவச உணவை பெற்றுக் கொள்ளலாம். இறைவன் இந்த நோயை எதிர்க்க நமக்கு உதவுவாராக" என கூறி உள்ளார்.

தினக் கூலித் தொழிலாளர்கள் நிலை

தினக் கூலித் தொழிலாளர்கள் நிலை

ஊரடங்கு உத்தரவால் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் தினக் கூலித் தொழிலாளர்கள் பலர் வேலையை இழந்துள்ளனர். அவர்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர்.

நல்ல முடிவு

நல்ல முடிவு

இந்த இக்கட்டான நேரத்தில் தன் உணவகத்தில் இலவச உணவு வழங்கும் முடிவை எடுத்துள்ளார் அம்பயர் அலீம் தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 28, 2020, 9:17 [IST]
Other articles published on Mar 28, 2020
English summary
Coronavirus : Aleem Dar announced free food for poor and unemployed in his restaurant.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X