For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டேவிட் வார்னரின் அடுத்த அதிரடி... மேஜிக் செய்து சவால் விட்ட வார்னர்

சிட்னி : ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கொரோனா வைரஸ் ஊரடங்கால் தனது வீட்டில் தன்னுடைய மனைவி, மற்றும் மகள்களுடன் பொழுதை போக்கி வருகிறார்.

Recommended Video

Top 5 ODI captains with most matches

இந்த ஊரடங்கு நேரத்திலும் அவருடைய பொழுதை பயனுள்ளதாக கழித்து வருகிறார் வார்னர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிக்டாக் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

தனியாகவும் குடும்பத்தினருடன் இணைந்து அவர் பகிர்ந்துவரும் இந்த வீடியோக்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் அவருடைய ரசிகர்கள் வட்டம் அதிகரித்துள்ளது. இதுவரை 4.3 மில்லியன் பாலோயர்ஸ் அவருக்கு கிடைத்துள்ளனர்.

ஒரே ஒரு இந்தியர் மட்டுமே.. அதிக ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்த டாப் 5 வீரர்கள் லிஸ்ட்!ஒரே ஒரு இந்தியர் மட்டுமே.. அதிக ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்த டாப் 5 வீரர்கள் லிஸ்ட்!

வீடுகளில் முடக்கம்

வீடுகளில் முடக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளும் முடங்கியுள்ள நிலையில், வீரர்களும் தங்களது வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். பரபரப்பாக பல நாடுகளுக்கும் சென்று கிரிக்கெட் போட்டிகளை விளையாடிவந்த வீரர்கள், தற்போது பயிற்சி ஆட்டங்களை கூட விளையாட முடியாத அளவில் தனித்து விடப்பட்டுள்ளனர்.

டேவிட் வார்னர் டிக்டாக்

டேவிட் வார்னர் டிக்டாக்

இதனிடையே கொரோனாவால் ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவருடைய அலப்பறைகள் எல்லை மீறி தான் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து டிக்டாக் வீடியோக்களை அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்திய பாடல்களுக்கு நடனம்

இந்திய பாடல்களுக்கு நடனம்

டிக்டாக் வீடியோக்களில் திரைப்பட பாடல்களுக்கு, குறிப்பாக இந்திய திரைப்பட பாடல்களுக்கு அவர் தனியாகவும் குடும்பத்தினருடன் சேர்ந்தும் ஆடி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இத்தகைய வீடியோக்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் அவரது ரசிகர்கள் வட்டம் 4.3 மில்லியனுக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் நடனம் சரியாக வரவில்லை என்று கலாய்த்தவர்கள்கூட தற்போது அவரது ரசிகர்களாகிவிட்டனர்.

வார்னரின் சவால்

வார்னரின் சவால்

இந்நிலையில் தற்போது அவர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் வொர்க்அவுட் செய்யும் அவர், கைகளையும், கால்களையும் அந்தரத்தில் விட்டு மேஜிக் செய்துள்ளார். மேலும் இதுபோல செய்ய முடியுமா என்று சவாலும் விட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு பின்னணியில் பிரபல பாடகர் ஹனி சிங்கின் பாடல் ஒலிக்கிறது. பார்க்கவும் அழகாக இருக்கிறது அந்த வீடியோ. வார்னரின் சிரிப்பு ஒன்று போதுமே.

Story first published: Thursday, June 18, 2020, 7:29 [IST]
Other articles published on Jun 18, 2020
English summary
David Warner shared another hiilarious video on Instagram
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X