For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லொஜக்... மொஜக்... பஜக்... மகளுக்கு பாக்சிங் கற்றுக் கொடுத்த வார்னர்

மெல்போர்ன் : நேற்று பாலிவுட் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டு அந்த வீடியோவை வைரலாக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர், தற்போது தன்னுடைய மகளுக்கு பாக்சிங் பாடம் எடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் பல நாடுகளில் ஊடரங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து விளையாட்டு வீரர்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

ஆயினும் அவர்களது ஆட்டத்தை யாராலும் நிறுத்த முடியவில்லை. என்ன மைதானத்தில் இருந்திருந்தால் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள். இப்பொழுது ஆடிக் கொண்டிருப்பது நடனம்.

ஏம்ப்பா உன்னோட வெள்ள முடியையும் கணக்குல எடுத்துக்கனுமா? தோனியை தொடர்ந்து கோலியிடம் வம்பு ஏம்ப்பா உன்னோட வெள்ள முடியையும் கணக்குல எடுத்துக்கனுமா? தோனியை தொடர்ந்து கோலியிடம் வம்பு

கொரோனாவால் வீட்டிற்குள் முடக்கம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர். இவர் தற்போது கொரோனா காரணமாக வீட்டிற்குள் முடங்கிருந்தாலும், சமூக வலைதளம் மூலம் தன்னுடைய பல்துறை திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

உற்சாகம் அடைந்த ரசிகர்கள்

உற்சாகம் அடைந்த ரசிகர்கள்

சமூக வலைதளங்கள் மூலம் தான் பயிற்சி செய்யும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வந்த வார்னர், சமீப காலங்களில் தன்னுடைய ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய மகளுடன் இணைந்து கடந்த வாரத்தில் பிரபல ஆஸ்திரேலிய பாடகர் டோனி வாட்சனின் 'நெவர் சீன் த ரெயின்' என்ற பாடலுக்கு அவர் டிக்-டாக் செய்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மகளுடன் குத்து போட்ட வார்னர்

மகளுடன் குத்து போட்ட வார்னர்

இதேபோல நேற்று, தன்னுடைய மகளுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கையிப்பின் 'சைலா கி ஜவானி' என்ற பாடலுக்கு இவர் டான்ஸ் ஆடி அந்த பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதுபோன்ற இவருடைய பல்துறை திறமைகள் இவரது ரசிகர்களுக்கே இந்த கொரோனா ஊடரங்கு மூலம்தான் தற்போது தெரியவந்துள்ளது.

மகளுக்கு பாக்சிங் பாடம்

மகளுக்கு பாக்சிங் பாடம்

இதனிடையே, இவர்கள் இருவருக்கும் நடனம் ஆடி போர் அடித்துவிட்டதாம். இதனால், தற்போது பாக்சிங் பக்கம் சென்று விட்டனர். தன்னுடைய மகளுக்கு பாக்சிங் பாடம் கற்றுத்தர துவங்கி விட்டார் வார்னர். மகள் விரும்பும் தளங்களில் தான் பயிற்சி கொடுப்பதாகவும் வார்னர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கூறி வீடியோவையும் வெளியிட்டுள்ளார். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே பயிற்சி கொடுக்கிறார் வார்னர்.

Story first published: Sunday, April 19, 2020, 18:09 [IST]
Other articles published on Apr 19, 2020
English summary
Warner shared a Video giving Boxing lessons to his Daughter
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X