For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் அசத்திய தீபா கர்மாகருக்கு கேல் ரத்னா விருது?

By Mathi

டெல்லி: ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாஜ ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்று இந்தியர்களின் இதயங்களை வென்ற தீபா கர்மாகருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் திரிபுராவை சேர்ந்த 23 வயதான தீபா கர்மாகர். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் தகுதி சுற்றில் 8-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சரிப்படுத்தி புதிய வரலாறும் படைத்தார்.

நூலிழையில் தவறிய வெண்கலம்

நூலிழையில் தவறிய வெண்கலம்

பெண்களுக்கான வால்ட் பிரிவின் இறுதி சுற்று பந்தயத்தில் அற்புதமாக சாகசம் செய்து வியப்பூட்டிய தீபா கர்மாகர் சிறிய தவறினால் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டார். அவர் 15.066 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார்.

ஜஸ்ட் 0.15 புள்ளிகள்

ஜஸ்ட் 0.15 புள்ளிகள்

இது தீபா கர்மாகரின் சிறந்த ஸ்கோராகும். அவர் 0.15 புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை பறிகொடுத்தார்.

கேல் ரத்னா விருது

கேல் ரத்னா விருது

தீபா கர்மாகர் பதக்கம் வெல்லாவிட்டாலும் உடல் திறமைக்கும், மன உறுதிக்கும் கடும் சோதனையாக விளங்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். இந்த நிலையில் தீபா கர்மாகரின் சாதனையை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதை வாழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிது ராய்க்கும்

ஜிது ராய்க்கும்

தீபாவுடன் துப்பாக்கி சுடும் வீரர் ஜிது ராய்க்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Wednesday, August 17, 2016, 17:35 [IST]
Other articles published on Aug 17, 2016
English summary
Dipa Karmakar has been recommended for the Khel Ratna and the 23-year-old gymnast will receive the award from President Pranab Mukherjee on National Sports Day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X