For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எம்எஸ் தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்... முன்னதாக பாடல் பகிர்ந்த டுவைன் பிராவோ

சென்னை : வரும் 7ம் தேதி முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்எஸ் தோனியின் பிறந்ததினம் கொண்டாடப்பட உள்ளது.

Recommended Video

IPL 2020: CSK's playing 11 if only Indians play

இதையொட்டி முன்னதாகவே சிஎஸ்கே அணியின் சக வீரர் டுவைன் பிராவோ, தன்னுடைய பாடல் மற்றும் நடனத்தை தோனிக்கு டெடிக்கேட் செய்துள்ளார்.

தான் ஹெலிகாப்டர் நடனம் ஆடியுள்ளதாகவும், அதை போல மற்றவர்கள் ஆடி அதை பகிரலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சிறந்த நடனத்தை தோனியின் பிறந்தநாளுக்கான நடனமாக அறிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது ஒரு நோய் பரப்பும் கருவி.. அதிர வைத்த இங்கிலாந்து பிரதமர்.. கடும் எதிர்ப்பு!அது ஒரு நோய் பரப்பும் கருவி.. அதிர வைத்த இங்கிலாந்து பிரதமர்.. கடும் எதிர்ப்பு!

ஜூலை 7ல் பிறந்தநாள்

ஜூலை 7ல் பிறந்தநாள்

முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் தோனியின் பிறந்ததினம் வரும் 7ம் தேதி வருகிறது. இந்த பிறந்ததினத்திற்காக அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதேபோல அவருடைய சக வீரர்களும் காத்திருக்கின்றனர் என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது டுவைன் பிராவோ தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தோனிக்காக பாடல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தோனியுடன் நட்பு

தோனியுடன் நட்பு

மேற்கிந்திய தீவுகளின் ஆல்-ரவுண்டரான டுவைன் பிராவோ, தன்னுடைய அணியில் மட்டுமின்றி, சிஎஸ்கேவிலும் தன்னுடைய திறமைகளை நிரூபித்து, அதன் பல்வேறு வெற்றித் தருணங்களுக்கு காரணமாக இருந்தவர். மேலும் அதன் கேப்டன் தோனியிடமும் அவர் இணக்கமான நட்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

பாடல் வெளியிட்ட பிராவோ

கிரிக்கெட்டில் மட்டுமின்றி, பாடல்கள் பாடுவதிலும் சிறந்து விளங்குகிறார் பிராவோ. கடந்த 2016ல் இவர் வெளியிட்ட இசை ஆல்பம் பல்வேறு தரப்பிலும் சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தோனியின் பிறந்ததினத்தையொட்டி முன்னதாகவே பிராவோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு அவர் கொடுத்துள்ள நம்பர் 7. தோனிக்கு டெடிக்கேட் செய்யப்பட்டுள்ள இந்த பாடலில் சிறப்பாக நடனமும் ஆடியுள்ளார் பிராவோ.

தோனி பிறந்தநாளுக்கு டெடிகேட்

தோனி பிறந்தநாளுக்கு டெடிகேட்

இதற்கென தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த சாம்பியன் டீமிற்கு நன்றி தெரிவித்துள்ள பிராவோ, தன்னுடைய நடனத்திற்கு ஹெலிகாப்டர் டான்ஸ் என்று பெயரிட்டுள்ளார். மேலும் மற்றவர்களும் தங்களது நடனத்தை ஆடி அதை பகிரலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சிறப்பான நடத்தை தோனியின் பிறந்தநாளுக்கு டெடிகேட் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, June 25, 2020, 7:46 [IST]
Other articles published on Jun 25, 2020
English summary
Tag me the your version of Helicopter Dance -Bravo
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X